Onetamil News Logo

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னரும் தூத்துக்குடி பகுதியில் காற்றின் தரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது

Onetamil News
 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னரும் தூத்துக்குடி பகுதியில் காற்றின் தரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது


சென்னை, 2019 டிசம்பர்  6- தூத்துக்குடி பகுதியில் காற்று, நீர், நிலம் மாசுபடுகிறது என்று கூறி தமிழக அரசால் கடந்த ஓராண்டிற்கு முன் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் ஓராண்டிற்கு பின்னரும் அந்தப் பகுதியில் உள்ள காற்றின் தரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இப்பகுதியில் காற்றில் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு ஆகியவற்றின் அளவீடுகளில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் உள்ளது என்று தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.
இது, மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகில் மீன் வளக் கல்லூரியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாசு கண்காணிப்பு நிலையத்தின் மூலம் காற்றில் உள்ள சல்பர் டை ஆக்சைடு அளவீட்டின் தெரிய வந்துள்ளது. முன்பு ஒரு கன மீட்டருக்கு 13 மைக்ரோகிராமாக இருந்த சல்பர் டை ஆக்சைடு 2018-19-ம் ஆண்டில் 12 மைக்ரோகிராமாக உள்ளது.  அதேபோல் நைட்ரஜன் ஆக்சைடு கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராமாக இருந்த அதே நிலை தற்போதும் நீடிக்கிறது.
சல்பர் டை ஆக்சைடின் அதிக செறிவுகள் சுவாச மண்டலத்தில் எரிச்சல் மற்றும் வீக்கம், குறிப்பாக உடல் செயல்பாடுகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இது நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா பிரச்சினை, இதய சம்பந்தமான நோய்களுக்கு வழி வகுக்கும். ஸ்டெர்லைட் ஆலை காற்று மாசு இல்லாமல் பராமரிக்கப்பட்ட போதிலும், போராட்டங்கள் மற்றும் தமிழக அரசு மற்றும் உள்ளூர்வாசிகளின் ஒரு சில பிரிவினரால் குற்றம் சுமத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை சல்பர் டை ஆக்சைடை சல்பூரிக் ஆசிட்டாக (கந்தக அமிலம்) மாற்றுகிறது. இது எந்தவித நச்சுப் பொருளையும் காற்றில் கலக்கவில்லை. 
இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஏ.வி. வெங்கடாச்சலத்திடம் கேட்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பியும் எந்தவித பதிலையும் இதுவரை அவர் தெரிவிக்கவில்லை. இது குறித்து அவ்வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு பிரச்சினையால் மட்டும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருக்கு தென்னிந்திய காப்பர் நுகர்வோர் சங்கத் தலைவர் கே. ஜெயராம் எழுதியுள்ள கடிதம் தொடர்பாக கூறுகையில், சமீபத்தில் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை ஆணைய தரவுகளின் அடிப்படையில், ஆலை மூடப்பட்ட பின்னரும், அந்தப் பகுதியில் காற்றில் உள்ள சல்பர் டை ஆக்சைடு அளவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. மேலும் ஆலை மூடப்படுவதற்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலைதான் தற்போது நீடிக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. ஆலையின் செயல்பாடுகள் காரணமாக காற்றில் சல்பர் டை ஆக்சைடு அதிக அளவில் கலக்கவில்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இதன்மூலம் தெரிய வந்துள்ளது. காப்பர் உற்பத்தியாளர்கள் முடிந்தவரை சல்பர் டை ஆக்சைடை சல்பூரிக் ஆசிட்டாக மாற்றவே நடவடிக்கை மேற்கொள்வார்கள். ஏனெனில் இது அவர்களுக்கு கூடுதல் வருவாயை தரக்கூடியதாகும். ஸ்டெர்லைட் ஆலை காற்றை மாசுபடுத்தியதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியதால், தமிழக அரசு இந்த ஆலையை மூட உத்தரவிட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எந்த ஆலையையும் நாங்கள் விரும்பவில்லை.  அதுபோன்று ஏதேனும் ஆலைகள் இருந்தால் அவை கண்டிப்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் உறுப்பினர் செயலாளர் ஜெஎஸ் காம்யோத்ரா கூறுகையில், காற்றின் தரம் பல்வேறு காரணிகளால் கண்காணிக்கப்படுகிறது. இந்த அளவீடுகள் பெரும்பாலும் காற்று அடிக்கும் தன்மையை சார்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள எந்தவித பெரிய ஆலைகளும் அனுமதிக்கப்பட்ட அளவான 80 மைக்ரோகிராம்களில் 20 மைக்ரோகிராம்களுக்கு அதிகமான நச்சு தன்மையை வெளியிடுவதில்லை என்று தெரிவித்தார். 
ஸ்டெர்லைட் நிறுவனம் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமாகும். இது பராமரிப்பு காரணங்களுக்காக கடந்த மார்ச் 2018-ம் ஆண்டு மூடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து இந்த ஆலையால் காற்று மாசு ஏற்படுகிறது என்று கூறி உள்ளூர்வாசிகளில் சில பிரிவினர் செய்த போராட்டம் காரணமாக தமிழக அரசு இந்த ஆலையை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மூட உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo