Onetamil News Logo

தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய கட்டுமானப் பணி குறித்த சைட் மேப் வைக்காதது குறித்தும் , திட்டமதிப்பீட்டை மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை தொடர்வது குறித்தும் வர்த்தகரின்  கேள்வி? 

Onetamil News
 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய கட்டுமானப் பணி குறித்த சைட் மேப் வைக்காதது குறித்தும் , திட்டமதிப்பீட்டை மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை தொடர்வது குறித்தும் வர்த்தகரின்  கேள்வி? 


தூத்துக்குடி 2020 ஜூலை 29 ; தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய கட்டுமானப் பணி குறித்த சைட் மேப் வைக்காதது குறித்தும் , திட்டமதிப்பீட்டை மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை தொடர்வது குறித்தும் வர்த்தகர் கேள்வி? எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ,மாநில அமைப்பாளர் ,சொ.ராஜா ,தூத்துக்குடி  மாநகராட்சி ஆணையர் -க்கு அனுப்பியுள்ள  மனுவில் கூறியதாவது.....
 தூத்துக்குடி  நகரை சுமார்ட் சிட்டியாக மாற்ற முதல்கட்டமாக பழைய பேருந்து நிலையத்தினை ( அண்ணா பேருந்து நிலையம் ) பல அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றியமைக்கும் பணி நடப்பது பற்றியும் , அதன் கட்டுமானப் பணி குறித்த சைட் மேப் வைக்காதது குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.
தற்போது நிலவிவரும் கொரானா வைரஸ்  அச்சுறுத்தலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலமைச்சர் அவர்கள்    விலகி இரு !  விழித்து இரு !!  வீட்டில் இரு !!! என்ற அறிவிப்பினை ஏற்று தூத்துக்குடி  மக்கள் அனைவரும் கடைபிடித்து வருவதும் அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை  நோய் தடுப்பு நடவடிக்கைகளை  வணிகர்களாகிய நாங்களும் எடுத்து வருவதும்  தாங்கள் அறிவீர்கள். 
தூத்துக்குடி  நகரை சுமார்ட் சிட்டியாக மாற்ற முதல்கட்டமாக ( அண்ணா பேருந்து நிலையம் ) பழைய பேருந்து நிலையத்தினை புதுப்பித்து  பல அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றியமைக்கும் பணி  நடப்பதை முறையாக அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுவது  பற்றிய தகவல் வேண்டுகிறோம். 
மேலும் கட்டுமானப் பணி குறித்த சைட் மேப் வைக்காதது குறித்தும் , திட்டமதிப்பீட்டை மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை தொடர்வது குறித்தும் உடனடியாக    விளக்கம் மட்டுமல்லாது ஆவன செய்யவும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo