Onetamil News Logo

10 கிராம ஊராட்சி செயலர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வரும் 22ம் தேதி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் 31.10.2019 வரை ஏற்பட்டுள்ள 10 கிராம ஊராட்சி செயலர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வரும் 22ம் தேதி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


தூத்துக்குடி 2019 நவம்பர் 9 ;தூத்துக்குடி மாவட்டத்தில் 31.10.2019 வரை ஏற்பட்டுள்ள 10 கிராம ஊராட்சி செயலர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட 22.11.2019 வரை அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல். தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;
தூத்துக்குடி மாவட்டத்தில் 31.10.2019 வரை ஏற்பட்டுள்ள 10 கிராம ஊராட்சி செயலர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட 22.11.2019 (வெள்ளிக்கிழமை)   வரை அலுவலக வேலை நாட்களில் (காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
விண்ணப்ப படிவங்களை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது http://www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளளலாம். 
கிராம ஊராட்சி செயலர் காலிபணியிடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இனசுழற்சிக்கு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். காலிப்பணியிட விபரங்களும் இனச்சுழற்சி விபரங்களும் http://www.thoothukudi.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் இவ்விபரங்கள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி செயலர்கள் காலிபணியிட விபரம்:-
வ.எண் ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் கிராம ஊராட்சியின் பெயர் இனசுழற்சி இடஒதுக்கீடு
1. தூத்துக்குடி திம்மராஜபுரம் தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியினர்) (பெண்/ஆதரவற்ற விதவை)
2. கருங்குளம் விட்டிலாபுரம் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் (ம) சீர் மரபினர் (பெண்/ஆதரவற்ற விதவை)
3. ஆழ்வார்திருநகரி புறையூர் தாழ்த்தப்பட்டோர் (பெண்/ஆதரவற்ற விதவை)
மேற்கண்ட மூன்று பணியிடங்கள்  28.03.2018 அன்று காலிப்பணியிடங்களாக அறிவிக்கை வெளியிடப்பட்டு, தகுதியான நபர் கிடைக்கப்பெறாததால் தற்போது பின்னடைவுப் பணியிடங்களாக கருதப்பட்டு அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
4. தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் பொது / பெண்
5. உடன்குடி மானாடுதண்டுபத்து பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) பெண்
6. சாத்தான்குளம் பெரியதாழை பொது / முன்னாள் இராணுவத்தினர்
7. கோவில்பட்டி வில்லிசேரி தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியினர்) --
8. ஓட்டப்பிடாரம் கலப்பைபட்டி மிகவும் பிற்படுத்தப் பட்டோர் (ம) சீர் மரபினர் --9. விளாத்திகுளம் பூசனூர் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) --
10. விளாத்திகுளம் பி.மீனாட்சிபுரம் பொது --
தகுதிகள் ;• காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிப்பவராக வேண்டும்.
இனம் வயது (01.07.2019-ல்) கல்வித்தகுதி
பொதுப் பிரிவினர் 01.07.2019-இல் 18 வயது பூர்த்தியடைந்தும், 01.07.2019-ல் 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர் மரபினர்/பிற்படுத்தப்பட்டோர் 01.07.2019-இல் 18 வயது பூர்த்தியடைந்தும்,01.07.2019-ல் 35 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்
அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசாணை எண். 72 (இ5) நாள்:09.07.2013,அரசாணை நிலை எண்.44,தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (வு2) துறைநாள்:11.03.2015,மற்றும் அரசாணைநிலை எண்.73 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ஆர்1) துறை, நாள்:19.04.2017,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி செயலாளர்; அவர்களின் கடித எண்.ஆளு1,நாள்: 02.01.2018-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படியும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை வழக்கு MP(MD) 2/2014>and 1/2015in WP(MD) 12032/2014> MP(MD) 2/2013 and 1/2015in WP(MD) 16884/2013 and WP(MD) 166/2016 and 3240/2016in WP(MD) 1393/2016ன் பேரில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவிற்கு உட்பட்டு நிரப்பப்படும். 
நிபந்தனைகள்:
1. விண்ணப்பதரார்கள், கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிசான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். 
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும்.
5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டஊராட்சியில் இல்லாவிட்டால் அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.
6. அரசு விதிகளின்படி  இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை (நிலை) எண்.171, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி(இ5) துறை, நாள்: 30.11.2018ன்படி திருத்திய ஊதிய விகிதம் ரூ.15900 - 50400/- மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் தனிஅலுவலர்/வட்டாரவளர்ச்சிஅலுவலர்(கி.ஊ) அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 22.11.2019 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter)  அனுப்பி வைக்கப்படும்.
ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இயைணதள (National Career Service Portal) www.ncs.gov.inமற்றும் தூத்துக்குடி மாவட்ட இணையதள www.thoothukudi.nic.in  என்ற இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo