தூத்துக்குடியில் கோவிலுக்கு சென்று விட்டு வரும் போது வேன் கவிழ்ந்து விபத்து 19 பேர் படுகாயம்: ஓட்டுனரின் சாமர்த்தியம் பாராட்டப்பட்டது ;வீடியோ இணைப்பு
தூத்துக்குடி 2018 செப் 30 ; தூத்துக்குடியில் வேன் கவிழ்ந்து 19 பேர் படுகாயம்: ஓட்டுனரின் சாமர்த்தியம் பாராட்டப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ,கடலாடி தாலுகாவுக்கு உட்பட்ட குசவன்குளம் கிராமம் பகுதியைச் சேர்ந்த கணேசன் குடும்பத்தினர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு இன்று ,மாலை வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வேன் இன்று மாலை தூத்துக்குடி சத்யாநகரில் வரும் போது குறுக்கே வந்த சைக்கிள் மீது மோதிட விடக்கூடாது. என்பதற்க்காக திருப்பும் போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேன் யில் பயணம் செய்த 11 பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் காயமுற்றனர்.. அவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.