Onetamil News Logo

திரையரங்குகளில் சிறப்பு காட்சிக்கு இதுவரை அரசு அனுமதிக்கவில்லை. அது குறித்து உள்துறையின் ஒப்புதல் பெற்று, அதன் பிறகு தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் பேட்டி 

Onetamil News
 

 திரையரங்குகளில் சிறப்பு காட்சிக்கு இதுவரை அரசு அனுமதிக்கவில்லை. அது குறித்து உள்துறையின் ஒப்புதல் பெற்று, அதன் பிறகு தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் பேட்டி 


தூத்துக்குடி 2018 ஜனவரி 9 ; சுதந்திர போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் பெருமைப்படுத்தும் அரசாக  அம்மா  அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்; கல்வித் தந்தை அமரர் எஸ்.ஆர்.நாயுடு அவர்களின் திருவுருவ சிலையை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ  இன்று (09.01.19) திறந்து வைத்து, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
செய்தி துறையின் மூலமாக சுதந்திர போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் பெருமைப்படுத்தும் அரசாக மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக மாண்புமிகு அம்மா அரசு பாரபட்சமின்றி  செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சட்டசபையில் அறிவித்ததை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மக்களின்  நலனுக்காக பாடுபட்ட  எஸ்.எஸ். இராமசாமி  படையாச்சி அவர்களின்  பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து அவருக்கு மணிமண்டபம்  கட்டுவதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் கடலூரில் நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே உயர்ந்த விருதான செவாலியர் விருது பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பெருமை படுத்தும் விதமாக  அம்மா அவர்களின் அரசு அவருக்கு மணிமண்டபம் அமைத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக அறிவித்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
அதைபோல், பத்திரிக்கைத் துறைக்கு சேவை செய்து, விளையாட்டுத்துறையிலும் அகில இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த  தென்மாவட்ட மக்களால் பெரிதும் போற்றப்பட கூடிய டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார்; அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற தென் மாவட்ட மக்களின்; கோரிக்கையினை ஏற்று, 30.11.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற டாக்டர்.எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களால், டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டு திருச்செந்தூரில் மணிமண்பம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பொருத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார்கள். அதன்படி 16.10.96 அன்று திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தான் ஆலை திறப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   அதன்பிறகு 2007ல் ஆலை விரிவாக்கத்திற்க்கு  சிப்காட் வளாகத்தில் 245 ஏக்கர் இடத்தை ஒதுக்கிடு செய்ததும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தான். மாண்மிகு அம்மா அவர்கள் ஆலையை மூடுவதற்;கு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி ஆலை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. ஆலை தொடங்கப்பட்டதிலிருந்து ஏறத்தால சுமார் 23 ஆண்டுகள் தொடர் போராட்டங்கள் நடைப்பெற்று வந்தன. இப்போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது   அம்மா  அரசு தான்;. தமிழக அரசு மாசு கட்டுபாட்டு வாரியத்தில் உரிமம் புதுப்பிக்காத காரணத்தினால் ஆலையை உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டது. மேலும் ஆலையை நிறந்தரமாக மூட வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட பொது மக்கள் மற்றும் போராட்டக்காரர்களின் உணர்வுகளை புரிந்து  ஆலையை மூடுவதற்கான அரசானை வெளியிட்டு தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டித்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
ஆலை நிறுவகத்தின் மூலம் தேசிய பசுமை தீர்ப்பு ஆணையத்தின் முறையிட்டதின் பேரில் ஆலையை திறப்பதற்;கு தேசிய பசுமை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு வந்த  மறுகணமே தமிழ்நாடு முதலமைச்சர்  உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என தெரிவித்தார்கள். மேலும், இந்த வழக்கை சரியாக எதிர் கொள்ள வேண்டும் என்பதற்காக சட்ட நிபுணர்கள், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர்களுடன் ஆலோசித்து, உரிய வழக்கறிஞர்களை நியமித்து, மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்பொழுது வழக்காடும் மன்றத்திற்கு சென்றிருப்பதால், அது முடிவுக்கு வந்த பிறகு அடுத்தகட்டமாக முதலமைச்சர்  ஆலோசனை  செய்து முடிவு எடுப்பார்கள். 
மேலும், பொங்கலுக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிக்கு இதுவரை அரசு அனுமதிக்கவில்லை. அது குறித்து உள்துறையின் ஒப்புதல் பெற்று, அதன் பிறகு தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். தமிழக அரசு அன்றைய சூழ்நிலையை பொறுத்து தான் அனுமதி அளிப்பது, அளிக்காமல்  இருப்பது குறித்து முடிவு செய்யும். ஆனால், அரசு இன்றைய வரை சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. திரையரங்குகளில் அதிக கட்டணம்  வசூலிப்பதை படிப்படியாக கட்டுப்படுத்தி வருகிறோம். காலங்காலமாக முறைப்படுத்தாத திரையரங்குகளின் கட்டணத்தை முறைப்படுத்தி இருக்கிறோம். அரசு குறைந்தபட்சம் மற்றும்  அதிகப்பட்ச கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதிகமாக வசூலிக்கின்ற திரையரங்குகளுக்கு முதல் முறை என்றால் ரூ.50,000/- அபராதமும், இரண்டாம் முறை என்றால்,ரூ.1,00,000/- ம், மூன்றாம் முறை என்றால் திரையரங்குகள் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நிலை அரசு சட்டத்திலே இருக்கின்றது. அதை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகை நேரத்தில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி பெற்றுத்தந்த அரசு இந்த அம்மாவின் அரசாகும். மேலும் மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் குழு அமைத்து பட்டாசு தொழில்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என தெரிவித்தார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo