Onetamil News Logo

சக்தி வித்யாலயாவில் சமத்துவப் பொங்கல் விழா

Onetamil News
 

சக்தி வித்யாலயாவில் சமத்துவப் பொங்கல் விழா


தூத்துக்குடி, 2020 ஜன. 13; தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல் விழா சக்தி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் திரு.சு.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. பொங்கல் விழாவில் கோலப் போட்டி, ஓவியப் போட்டி, சாக்கு ஓட்டப்பந்தயம், உறி அடித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக பொங்கல் திருநாள் உடையணிந்து வண்ணக்கோலமிட்டு மாணவ, மாணவிகள் பொங்கலிட்டனர்.
பொங்கல் விழாப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை பள்ளியின் முதல்வர் ஜெயாசண்முகம் வழங்கி பாராட்டினார்.
பள்ளியின் நிறுவனர் சு.சண்முகம் தலைமையுரையில்,  விகாரி வருட தைப்பொங்கல் திருநாள் விவசாயிகளுக்கு செழிப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர்களுடைய மகிழ்ச்சியில் நாமும் பங்குகொண்டு, சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo