Onetamil News Logo

தூத்துக்குடிக்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA  கப்பல் இன்று வருகை ;தமிழ்நாட்டை சார்ந்த  686 பேர் ,கேரளா 3 பேர்,கர்நாடகா 2 பேர்,பாண்டிச்சேரி 2 பேர்,தூத்துக்குடி 57 பேர் உட்பட பல வருகை 

Onetamil News
 

தூத்துக்குடிக்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA  கப்பல் இன்று வருகை ;தமிழ்நாட்டை சார்ந்த  686 பேர் ,கேரளா 3 பேர்,கர்நாடகா 2 பேர்,பாண்டிச்சேரி 2 பேர்,தூத்துக்குடி 57 பேர் உட்பட பல வருகை 


 தூத்துக்குடி 2020 ஜூன்  2 ; தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA  கப்பல் மூலம் பல்வேறு  மாநிலங்களை சேர்ந்த பயணிகள் வருகை தந்தனர்.அவர்களை  தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,ஆகியோர் வரவேற்றார்கள்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA  கப்பல் மூலம் இன்று பல்வேறு  மாநிலங்களை சேர்ந்த பயணிகள் வருகை தந்தனர் . 
இன்று இலங்கை கொழும்பில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 713 பயணிகள் வந்தனர். இதில் தமிழ்நாட்டை சார்ந்த  686 பேர் ,கேரளா 3 பேர்,கர்நாடகா 2 பேர்,பாண்டிச்சேரி 2 பேர்,தூத்துக்குடி 57 பேர் உட்பட  கொழும்பில் இருந்து  புறப்பட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு  இன்று காலை 9 மணிக்கு இழுவை கப்பல் மூலம் இழுத்து வந்தது. இதில் தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 557 ஆண்கள், 129 பெண்கள் என மொத்தம் 686 பயணிகள் வந்துள்ளனர்.அவர்கள் இறங்கும் இடத்தில் கைகளை கழுவி  அதன் பின்னர் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து , பரிசோதனை முடிந்த பின் பேருந்தில் பாதுகாப்பாக அழைத்து சென்று காத்திருப்போர் அறைக்கு அழைத்துச்சென்றனர். காத்திருப்போர் அறையில் பல்வேறு வசதிகள், குடிவரவு நுழைவு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  உடைமைகளை ஸ்கேனிங் செய்து, பயணிகள் பேருந்துகளில் செல்லும் இடங்கள் குறித்து மற்றும் காத்திருப்போர் அறையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் , கழிப்பறை, பயணிகளுக்கு குடிநீர் பாட்டில்கள் போன்றவை தயார் செய்யப்ட்டுள்ளன 
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிக தூரம் கொண்டுள்ள மாவட்டங்களுக்கு முதலில் பயணிகளை அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் அனைத்து நபர்களுக்கும் பரிசோதனை செய்யபட்டுள்ளது.காவல் துறையினர் மூலம் தேவையான பாதுகாப்பு வசதி பலப்படுத்தப்பட்டுள்ளது.. அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து இப்பணிகளை மேற்கொண்டுவருகின்றனர் என தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன்,  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.
இதில் மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் பிமல் குமார் ஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரித்திவிராஜ்,  துறைமுக பொறுப்புக்கழக முதன்மை பொறியாளர் ரவிகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், துறைமுக பாதுகாப்பு டெப்டி கண்சர்வேட்டர் பிரவீண் குமார் சிங், டிராபிக் மேனேஜர் பிரபாகர், டெப்டி கமாண்டண்ட் மிஸ்ரா(சி.ஐ.எஸ்.எப்), தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மக்கள் தொடர்பு அலுவலர் சசிகுமார், மரு.பூர்ணிமா மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் அலுவலர்கள்; உடன் இருந்தனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo