Onetamil News Logo

தூத்துக்குடியில் கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி

Onetamil News
 

தூத்துக்குடியில் கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி



தூத்துக்குடி 2020 ஜனவரி  24 ;தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான அறிமுக பயிற்சியினை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்து கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அறிமுக பயிற்சி கையேட்டினை வழங்கினார்.
தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி  துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (24.01.2020) நடைபெற்றது. விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான அறிமுக பயிற்சியினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அறிமுக பயிற்சி கையேட்டினை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பின்னர்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது:
புரட்சித்தலைவி அம்மா  ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதைபோல்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி மற்றும் கட்சி சாராத பிரதிநிதிகளுக்கு அந்தந்த மாவட்டத்தில் அறிமுக பயிற்சி வழங்கிட உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 403 கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு  அறிமுக பயிற்சி   அளிக்கப்படுகிறது. முதல் நாளான இன்று தூத்துக்குடி, கருங்குளம், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 202 கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 200 துணைத்தலைவர்களுக்கு  அறிமுக பயிற்சி  அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நாளை, கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு  அறிமுக பயிற்சி   அளிக்கப்படுகிறது. நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் மக்கள் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே பல நபர்கள் கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களாக பணியாற்றி இருப்பீர்கள். தற்போது புதிதாக பதவியேற்ற தலைவர்களும் எந்த ஒரு பாகுபாடின்றி தன்னிச்சையாகவும், வேகமாகவும் மக்கள் பணியாற்ற வேண்டும். இந்தியாவிலேயே 80 சதவிதத்திற்கும் அதிகமாக கிராமங்கள் உள்ளது. ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் ஒரு மாநிலம் முன்னேற்றம் அடைய வேண்டும்,  ஒரு மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் ஒரு மாவட்டம் முன்னேற்றம் அடைய வேண்டும்,  ஒரு மாவட்டம் முன்னேற வேண்டும் என்றால் ஒரு கிராமம் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆகவே கிராம ஊராட்சிகளில் அனைத்து பணிகளையும்  மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.  
புரட்சித்தலைவி அம்மா கிராம ஊராட்சி பயன்பெற வேண்டும் என்பதற்காக அனைத்து ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி கட்டிடம் கட்டப்பட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர்கள் பணியாற்ற வழிவகை செய்தார்கள். கிராமத்தில் உள்ள பொதுமக்களும் அரசின் திட்டங்களை முறையாக பெற வேண்டும் என்பதற்காக அனைத்து பகுதியிலும் பொது சேவை மையம் திறக்கப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின்  கீழ் 24 கிளைகள் செயல்படுகிறது. 25வது கிளையாக கோவில்பட்டியில் தொடங்கப்பட உள்ளது. தென்மாவட்டங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் குவைத் நாட்டின் பெட்ரோலியம் நிறுவனத்துடன் ரூ.43,000 கோடி மதிப்பில் கச்சா எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் தொடங்கப்படவுள்ளது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  இதன்மூலம் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நமது மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தி வரும் அடிப்படை வசதிகளான குடிநீ;ர், சாலை உள்ளிட்ட பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிலையான அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கழிவு நீர் ஓடை, சுத்தம் மற்றும் வரத்துக்கால்வாய் புனரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டதன் காரணமாக, இயல்பான மழையைவிட 40 சதவிதம்  மேல் மழை பெய்யதாலும் எந்த ஒரு பகுதியிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பயிற்சி யை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு குளங்கள் புனரமைப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ப்பட்டது. வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்ததால் குடிமராமத்து பணிகள் முழு அளவில் முடியாமல் உள்ளது. தற்போது அதற்கான பணிகளும் துவங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து குடிமராமத்து திட்டத்தின் செயல்பாடுக்ள குறித்து கேட்டறிந்தார்கள்.  ஏனென்றால் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திய குடிமராமத்து திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் அதிக அளவில் மகிழ்ச்சியும், பயன்பெற்றும் வருகிறார்கள்.  தூய்மை பாரத திட்டம் சிறப்பாக செயல்படுத்தியதால் நமது மாவட்டம் இந்திய அளவில் 7வது இடம் பிடித்துள்ளது.  தமிழ்நாடு அளவில் 2வது இடம் பிடித்துள்ளது. கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் இந்த பயிற்சியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.  மாவட்ட அளவில்; செய்யும் நீங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். சில பணிகள் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய பணிகள்  தமிழ்நாடு முதலமைச்சர்  கவனத்திற்கு கொண்டு சென்று அதனையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்; என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் இரா.சத்யா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, துணை இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ்பாண்டியன், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், கிராம ஊராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo