Onetamil News Logo

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக புதிய அலுவலகம் மீனாட்சிபுரம் 4-வது தெரு ; கடம்பூர்  S.V.S.P மாணிக்கராஜா திறந்துவைத்தார்.   

Onetamil News
 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக புதிய அலுவலகம் மீனாட்சிபுரம் 4-வது தெரு ; கடம்பூர்  S.V.S.P மாணிக்கராஜா திறந்துவைத்தார்.   


தூத்துக்குடி 2019 அக்டோபர் 8 ; அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர்,  டி.டி.வி.தினகரன் வாழ்த்துக்களுடன் இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலக திறப்பு விழா விழா இன்று நடந்தது. 
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் ,தென் மண்டல பொறுப்பாளர் ,கடம்பூர்  S.V.S.P மாணிக்கராஜா  தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக திறப்புவிழாவிற்கு வந்தவரை முன்னதாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டோல்கேட்டில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக புதிய அலுவலகம் மீனாட்சிபுரம் 4-வது தெருவில் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி தேர்தல் பிரிவு செயலாளர் எஸ்.வி.எஸ்.பி மாணிக்கராஜா இன்று திறந்து வைத்தார். 
விழாவில் பேசுகையில், அதிமுகவுடன் அமமுக இணைந்தால் அமமுக தொண்டர்களே கட்சியில் முதலிடம் பிடிப்பர். மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய செயலாளர்களும் நம்மிடமே உள்ளனர். விதைக்க வைத்த நெல்லை தின்றவர்கள் தற்போது நம்மிடம் இல்லை.  நாம் ஒற்றுமையாக இருந்து தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து தாெகுதிகளையும் கைப்பற்றுவோம்.தேர்தலில் தாெண்டர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரே தலைவர் டிடிவி தினகரன் தான். டிடிவி தினகரன் தொண்டர்களை கைவிட மாட்டார். தாெண்டர்களிடம் சிலர் சபலத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார். 
 இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் புவனேஷ்வரன், வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தரராஜ், அமைப்பு செயலாளர் இரா ஹென்றி தாமஸ், எட்வின் பாண்டியன், அந்தோணி கிரேசி,ஏரல் ரமேஷ், வி.பி.ஆர் சுரேஷ், ராமச்சந்திரன், ,மாவட்ட கழக பொருளாளர் ,வக்கீல் TVA .பிரைட்டர்  உள்ளிட்ட பலர் கலந்து காெண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo