Onetamil News Logo

உப்பாத்து ஓடை கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம் ;முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா ஏற்பாட்டில் குழுக்கள் அமைத்து பணிகளை பார்வையிட்டு உற்சாகம்

Onetamil News
 

உப்பாத்து ஓடை கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம் ;முள்ளக்காடு,முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா ஏற்பாட்டில் குழுக்கள் அமைத்து பணிகளை பார்வையிட்டு உற்சாகம்


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 6; உப்பாத்து ஓடை கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம் ;முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா ஏற்பாட்டில் பொதுமக்கள், விவசாயிகள் குழுக்கள் அமைத்து பணிகளை பார்வையிட்டு உற்சாகம் அடைந்து வருகின்றனர். 
உப்பாற்று ஓடை ஆக்கிரமிப்பு விவகாரம்;முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா மற்றும் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான உப்பாத்து ஒடையின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தினமும் பார்வையிட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்தின் கீழ், சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது.  இந்த குளம் தாமிரபரணி நீர் பாசனத்தின் கடைசியில் உள்ளது. மேலும் ஓட்டபிடாரம், மணியாச்சி, தட்டப்பாறை பகுதிகளில் பெய்யும் மழைநீரும் இந்த குளத்தில் தான் வந்து சேருகிறது.  இக்குளங்களை நம்பி, .கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், காலாங்கரை,, அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு முதலான பகுதிகளில் வாழை, நெல், உளுந்து போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்த குளங்களில் மழை காலங்களில் மிகுதியான வெள்ள நீரை அங்குள்ள 24 கண்மாயில் இருந்து 7 கிமீ நீளமுள்ள உப்பாத்து ஓடை வழியே கடலுக்கு திறந்து விடுவது வழக்கம். ஆனால் உப்பாத்து ஒடையில் ஆக்கிரமிப்பு மற்றும் கரைகள் பலமில்லாத காரணங்களால் உப்பாத்து ஓடையில் தண்ணீர் சரியாக செல்ல முடியாமல், கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து வந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி உத்தரவின் பேரில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றம் ஜெஎஸ் நகர் குடியிருப்போர் சங்கத்தினர் சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு தினமும் பார்வையிட்டு வருகிறார்கள். பணிகளை பார்வையிடுவதற்க்காக 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுக்களுக்கும் 7 நபர்கள் விதம் பணிகளை பார்வையிட்டு வருகிறார்கள். இதனால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 
இதுகுறித்து தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் குளம் பாசனர் சங்கம் மடை எண் -2 நீரினை பயன்படுத்துவோர் சங்கம் எண் 60, முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா  தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது,....
தூத்துக்குடியில் எதிர்வரும் பருவ மழையில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே, பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் தூத்துக்குடி அருகே உப்பாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி  கரைகளை பலப்படுத்திடவேண்டும். எதிர்காலத்தில் மழையால் ஏற்படும் வெள்ளம் நகருக்குள் வராமல் கடலுக்குள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டத்திற்குள் வரும் வெள்ள நீர் அத்திமரப்பட்டி,காலங்கரை ,வீரநாயக்கன் தட்டு போன்ற கிராமங்களுக்கு வெள்ளநீர் புகாமல் கடலுக்குள் நேரடியாக செல்லும் வகையில், நீண்டகால திட்டம் தயாரிக்கப்பட்ட வேண்டும் என்றார் அவர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo