Onetamil News Logo

விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட தமிழ் விவசாயிகள் சங்கத்தலைவர் ,தலைவர் ,OA. நாராயணசாமி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு பேட்டி 

Onetamil News
 

விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட தமிழ் விவசாயிகள் சங்கத்தலைவர் ,தலைவர் ,OA. நாராயணசாமி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு பேட்டி 


தூத்துக்குடி 2020 மே 28 ;விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சங்கம்,தலைவர் ,OA. நாராயணசாமி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுகுறித்து அவர் கலெக்டர் யிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது..... 2020ல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சாரத் திட்டத்தினால் தமிழக விவசாயிகளின் எதிர்காலம் இருள் சூழ்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடுமையாக உழைத்து விவசாயம் செய்து வரும் இந்த நிலையில் உழைப்புக்கேற்ற ஊதியமும் இல்லை, உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு நியாயமான விலை இல்லை, விவசாயிகள் என்றும் கடன் சுமையால் தான் வாடி கொண்டிருக்கின்றான்.
 இந்த இலவச மின்சாரத்தை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் தமிழகமெங்கும் வரிகொடா இயக்கத்தை நடத்தினார் தமிழகத்தில் இலவச மின்சாரம் சும்மா கிடைக்கவில்லை 60 உயிர்களை துப்பாக்கி சூட்டிற்கு பலி கொடுத்து அந்த விவசாயப்  போராளிகள்  சிந்திய ரத்தத்திற்கு கிடைத்தது தான் இந்த இலவச மின்சாரம் இன்று அனைத்து விவசாயிகளும் உபயோகத்தில் கொண்டிருக்கிறார்கள் 
ஒரு விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்வதற்கு இரவு பகல் என்று பாராமல் கண்ணும் கருத்துமாக உழைத்தால் தான் அந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்ய முடியும் , இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயிகளின் கதி என்ன நிலைமைக்கு ஆகும் என்று கூறியுள்ளனர்.  மத்திய அரசு 1 ஹச் பி ஒன்றுக்கு ரூ 20.000 கட்டவேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.ஒரு விவசாயி 3 ஹச் பி வைத்து உபயோகிப்பதால் வருடத்திற்கு ரூ 60.000 செலுத்தினால் தான் விவசாயம் செய்யும் சூழ்நிலை உளள்து.இந்த புதிய மின்சாரத்திட்டத்தினால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத பிள்ளையில் உள்ளனர்.நாட்டின் முதுகெலும்பு விவசாயம் அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய மாநில அரசுகளே விவசாயிகளின் இலவச மின்சாரத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்,
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo