Onetamil News Logo

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 2019 ; வீடியோ எடுக்க ஆர்வம் உள்ள அனைவரும் கேமராவிற்கான வாடகை விவரம் குறித்து விண்ணப்பிக்கலாம் ;தூத்துக்குடி கலெக்டர் தகவல்

Onetamil News
 

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 2019 ; வீடியோ எடுக்க ஆர்வம் உள்ள அனைவரும் கேமராவிற்கான வாடகை விவரம் குறித்து விண்ணப்பிக்கலாம் ;தூத்துக்குடி கலெக்டர் தகவல் 


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 13 ;நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 2019 நடைபெற உள்ளதை முன்னிட்டு வீடியோ கேமராவிற்கான வாடகை விவரம் தொடர்பான விலைப்புள்ளி கோருதல் ,  மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 2019-ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளில் வீடியோ கிராபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  எனவே வீடியோகிராபர்கள் வீடியோ கேமராவுடனான வாடகை விவரங்களை இறுதி செய்யும் பொருட்டு விலைப்புள்ளி விவரங்கள் கோரப்பட்டுள்ளது.  இதற்கான படிவங்களை www.tenders.tn.gov.in மற்றும் www.thoothukudi.nic.in ஆகிய இணையதளங்களில் வரும் 14.02.2019 முதல் 22.02.2019 பிற்பகல் 3 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் படிவங்களை வரும் 22.02.2019 அன்று மாலை 3 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களின் அறையில் உள்ள மூடி முத்திரையிடப்பட்டுள்ள பெட்டியில் போடப்பட வேண்டும்.  22.02.2019 அன்று  3 மணிக்கு பிறகு வரும் டெண்டர் படிவங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  22.02.2019 அன்று மாலை 3.30 மணிக்கு பெட்டி திறக்கப்பட்டு நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 2019 தொடர்பான வீடியோ கிராபர்கள் முடிவு செய்யப்படுவார்கள் இது தொடர்பான முன்னோடி கூட்டம் 18.02.2019 மாலை 04.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo