Onetamil News Logo

தூத்துக்குடியில் பரவும் துப்பாக்கி கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்  திட்டம்  வகுத்திருக்கும்  காவல்துறை

Onetamil News
 

தூத்துக்குடியில் பரவும் துப்பாக்கி கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்  திட்டம்  வகுத்திருக்கும்  காவல்துறை


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 23 ; தூத்துக்குடியில் பரவும் துப்பாக்கி கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க காவல்துறை  திட்டம்  வகுத்துள்ளது.
தூத்துக்குடி திமுக இளைஞரணி செயலாளர் பில்லா ஜெகன், தனது தம்பி சிம்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுக வேட்பாளர் கனிமொழிக்கு  ராக்கெட் ராஜா, ஹரி நாடார், சுபாஷ் பண்ணையார் ஆதரவு தெரிவித்து தேர்தல் வேலை செய்தனர்.அப்போது, தூத்துக்குடியில் ஹரி நாடார் வாகனத்தில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.வட மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளரும் தூத்துக்குடியில் பிடிபட்டார்.
இந்த சம்பவத்திலும் எந்த நடவடிக்கையும் இல்லை. புதுக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிந்து விட்டு, அவர்களை தேர்தல் வேலைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருக்கும் போது, லைசென்ஸ் துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.ஆனால், தூத்துக்குடியில்  சகஜமாக துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதும், காவல் துறை தெரியாமல்  இருப்பதும்,மக்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இன்னும் எத்தனை பேரிடம் துப்பாக்கிகள் உள்ளது, சப்ளை செய்வது யார், பயிற்சி கொடுப்பது யார் என்ற முதற்கட்ட விசாரணையை  காவல்துறை எடுத்து வருகிறது.,தென் மாவட்டங்களில் கடந்த இருபது  ஆண்டுகளாக துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர் கதையாக இருந்தாலும் மத்திய புலனாய்வு பிரிவினர் களை  எடுக்கவேண்டும்.தூத்துக்குடியில் பரவும் துப்பாக்கி கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க காவல்துறை  திட்டம்  வகுத்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo