Onetamil News Logo

தூத்துக்குடியில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத 5வது நாள் விழா ; உறுதிமொழியேற்று கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் முதல் கையொப்பமிட்டு துவக்கி வைத்தார்   

Onetamil News
 

தூத்துக்குடியில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத 5வது நாள் விழா ; உறுதிமொழியேற்று கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் முதல் கையொப்பமிட்டு துவக்கி வைத்தார்   


தூத்துக்குடி 2021 ஜனவரி 22 ;தூத்துக்குடியில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தூத்துக்குடி காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக வாகன ஓட்டுனர்களிடம் சாலை விதிகளை மதித்து நடப்போம் என உறுதிமொழியேற்று கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் முதல் கையொப்பமிட்டு துவக்கி வைத்தார்.
இந்த மாதம் 18.01.2021 முதல் 17.02.2021 வரை 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு மாதத்தில் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி கடந்த 18.01.2021 முதல் தினம் தோறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று (22.01.2021) சாலை பாதுகாப்பு மாதத்தின் 5வது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த 5வது நாளான இன்று தூத்துக்குடி நகர காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுபவர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் “எனது வாழ்நாள் முழுவதும் சாலை விதிகளை மதித்தும், எனக்கோ என்னால் பிறருக்கோ, விபத்து ஏற்படுத்தாதவாறு வாகனம் ஓட்டுவேன் என்றும், இனிவரும் சந்ததிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும் உறுதிமொழியேற்று வாகன ஓட்டிகள் கையெழுத்திடும் நூதன சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் அவர்கள் உறுதிமொழியேற்று முதல் கையொப்பமிட்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி  விநாயகம், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர்  மயிலேறும் பெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர்  பெலிக்ஷன் மாசிலாமணி, குமார், திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர்  ராஜசேகரன், உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன்,  பென்சன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo