சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்துவிட்டது தூத்துக்குடியில் இன்னும் வடியவில்லை மழைநீர் ; வெள்ளைக்காரர்களை நினைக்குது மனசு
தூத்துக்குடி 2021 ஜனவரி 14 ;தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, கீழச் சண்முகபுரம் பிராப்பர் தெரு, S.P.G. கோவில்தெரு, கான்வெண்டரோடு, சந்தை ரோடு, வி. இ.ரோடு, தந்தி ஆபீஸ் சாலை உட்பட பல தெருக்கள் கடல் மடல்மட்டத்தைவிட தாழ்வான பகுதிகளாக உள்ளது.
அன்னைய நகராட்சி அந்த பகுதிகளில் உள்ள கழிவுநீரை தற்போது உள்ள விளையாட்டு மைதானம் உள்ளே மோட்டார் பம்ப் வைத்து கழிவுநீரை அகற்றி வந்தது.
அந்த நீர் லசால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று, காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக புதுக்கடற்கரை பகுதியாக S.R.M. எதிர் ஹோட்டல் எதிர் உள்ள படகு யார்டில் இணைக்கப்பட்டு கழிவுநீர் அகற்றப்பட்டு வந்தது.
காலங்கள் மாறிய, தூத்துக்குடி மாநகராட்சியாக உருவானது. ஆனால் பழைய திட்டங்கள் தூக்கி எறியப்பட்டன.
தூத்துக்குடி மாநகரம் கடந்த 5 நாட்களாக பெய்த கடும்மழையால் தத்தளிக்கிறது.
பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பழைய மாநகராட்சி எதிர் உள்ள கழிவு சாக்கடையை சுத்தம் செய்ய இதுவரை நடக்கவில்லை.
அது போல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த பகுதி கடை ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டால் கழிவுநீர் செல்ல நேரிடும்.
மாநகராட்சி உடனடியாக விளையாட்டு மைதானத்தில் பம்ப் வைத்து கழிவுநீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட மக்களின் அவலைக் குரல் 🤣கண்ணீர்🤣 சிந்துகிறது.