Onetamil News Logo

பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்

Onetamil News
 

பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்  


 தூத்துக்குடி 2019 மார்ச் 13 ;பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடந்தது.
சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் அரசியல் கட்சியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடியில் உள்ள வஉசி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும், கொடுக்ககூடிய தணடனை இனி ஒருவன் தவறான வழியில் ஒரு பெண்ணை தொடுவதற்க்கு பயப்பட வேண்டும் ,அந்த அளவுக்கு இந்த தண்டனை இருக்க வேண்டும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.
போராட்டத்திற்க்கு SFI  மாவட்ட தலைவர் கார்த்தி்க், மாவட்ட செயலளார் மாரிசெல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர், போராட்டத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று  குற்றவாளிகளை தூக்கிலிடக் கோரி  கோஷமிட்டனர்.தகவலறிந்து வந்த தென்பாகம் ஆய்வாளர்  ஜீன்குமார் மற்றும் போலீசார் ,மாணவ மாணவிகளிடம் பேசியதையடுத்து  மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo