Onetamil News Logo

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகம் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் 

Onetamil News
 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகம் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் 


 

தூத்துக்குடி 2019 மே 16: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகம் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்  மாவட்டஆட்சித்தலைவர்; சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. 
தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வைகாசிவிசாகம் திருவிழா18.05.2019 அன்று நடைபெறுதல் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்; சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (16.05.2019) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர்;  தெரிவித்ததாவது:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வைகாசி விசாகம் திருவிழா17.05.2019 முதல் 19.05.2019 முடிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த மூன்றுநாட்கள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவருவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் திருச்செந்தூர் சிறப்பு நிலைபேரூராட்சி மூலம் திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும்,பேரூராட்சி மூலம் பழுதடைந்த சாலைகள் மற்றும் மின்விளக்குகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 
மேலும்,சுகாதாரத்துறை மூலம் திருவிழா நாட்களில் மருத்துவ குழுவினர் 24 மணிநேரமும் திருக்கோயில் வளாகத்தில் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ சிகிச்சை வழங்கிடதயார் நிலையில் இருக்கவும், போதியமருந்தகள் இருப்பில் வைக்கவும்உரியஏற்பாடுகள் செய்யவேண்டும்.  போக்குவரத்துத்துறை மூலம் பல்வேறுவழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கநடவடிக்கைஎடுக்கவேண்டும். மீன்வளத்துறை மூலம்,நீச்சல்,கடலாள்,முத்துகுளி பணியாளர்களுடன் பாதுகாப்புபணியில் பணிபுரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். 
தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மூலம் கடலில் உயிர்க்காப்பு மிதவை வளையங்களுடனும், உயிர்மீட்பு படகுடனும் (லைப்போட்) பாதுகாப்புபணிகளிலும்,தீயணைப்புஊர்தியில் முழுமையாகதண்ணீர் நிரப்பப்பட்டும், மருத்துவஊர்தியும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். காவல்;துறை மூலம்,திருக்கோயில் உட்பகுதிகள்,வெளிபகுதிகள் மற்றும் இதர இடங்களில் பக்தர்களுக்கு போதியபாதுகாப்புஏற்பாடுகள் மற்றும்  திருக்கோயில் வளாகங்கள் மற்றும் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்துநெரிசல் ஏற்படாவண்ணம் துரிதநடவடிக்கை எடுத்திட வேண்டும். பாதயாத்திரை பக்தர்களுக்கு இரவுநேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கவேண்டும். மேலும், பக்தர்களுக்கு போதிய அடிப்படைவசதிகள் செய்யவேண்டும். வைகாசி விசாகம் விழாமிகச் சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனமாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முகஉதவியாளர் (பொதுபொ) கவிதா,திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்பிரியா,இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.பரிதாசெரின்,உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) திரு.மாகீன் அபுபக்கர், இந்துசமயஅறநிலையத்துறை இணை இயக்குநர் குமரதுரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் பாலசரஸ்வதி, திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo