Onetamil News Logo

துறைமுகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என்று தூத்துக்குடியில் HMS சங்கத்தினர் தூத்துக்குடியில் கோரிக்கை   

Onetamil News
 

துறைமுகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என்று தூத்துக்குடியில் HMS சங்கத்தினர் தூத்துக்குடியில் கோரிக்கை   


 தூத்துக்குடி 2019 ஜூலை 19 ; இந்திய நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள ஒரு நாடு. இது உலகின் பெரிய மூவலந்தீவுகளுள் ஒன்று. இந்தியக் கடற்கரையின் நீளம் 7600 கிலோமீட்டர்கள். இங்கு 13 பெரிய துறைமுகங்களும் 187 சிறிய, நடுத்தர துறைமுகங்களும் உள்ளன. ஜூன்  2010-இல் போர்ட் பிளேர் நாட்டின் பெரிய துறைமுங்களில் 13-ஆவது துறைமுகமாகச் சேர்க்கப்பட்டது.
2007-ஆம் கணக்கின் படி ஏறத்தாழ 74 சதவீத சரக்கினை பெரிய துறைமுகங்களே கையாண்டன. மேலும் 70% பெட்டகப் போக்குவரத்தினை மும்பைத் துறைமுகமும், ஜவகர்லால் நேரு துறைமுகக் கழகமுமே கையாண்டன.
பெரிய துறைமுகங்கள் ;காண்ட்லா,பரதீப்,புது மங்களூர் துறைமுகம், மர்ம கோவா, ஜே. என். பி. டி,எண்ணூர் காரைக்கால், கொச்சி, கொல்கத்தா, சென்னை,தூத்துக்குடி,மும்பை,விசாகப்பட்டினம் இந்த துறைமுகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என்று தூத்துக்குடியில் H M S சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களில்  சுமார் 45000 ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது .ஆனால்  அரசு அந்த பணியிடங்களை நிரப்பாமல் 55 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வருகின்றனர் .இது சம்பந்தமாக 2019 க்கு முன் பாராளுமன்ற குழுவிடம் அகில இந்திய துறைமுக ஊழியர் மற்றும் டக் மற்றும் மெரைன் ஊழியர்களின் நலன்கருதி அறிக்கை அளிக்கப்பட்டது ஆனால்  திருத்தப்பட்ட பாராளுமன்ற மசோதாவில் நாங்கள் அளித்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை . முக்கிய துறைமுகங்களை தனியார் மாயம்மாக்க அரசு முயற்சி செய்து வருகிறது .தனியார் மயமாக்களை விட்டு விட்டு அகில இந்திய துறைமுக ஊழியர் மற்றும் டக் மற்றும் மெரைன் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் வரும் ஆகஸ்ட் மதம் அகில இந்தியா துறைமுக ஊழியர்கள் மற்றும் டக் மெரைன் ஊழியர் சங்கம்  H M S போராட்டம் நடத்தும் என்றும் .தூத்துக்குடி வ உ சி  துறைமுகத்தில்  டக் மற்றும் மெரைனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்படவேண்டும் .துறைமுக போக்குவரத்து ஊழியர்களின் ஊக்கத்தொகையை உயர்த்தி தரவேண்டும் .ஊழியர்களின் பொது தேவைக்கான முன் பணம் 50000 வழங்க வேண்டும்.சரக்கு கையாளும் ஊழியர்களின் வேலையை உறுதி செய்யவேண்டும் .மெரைன் ஊழியர்களை பணிக்கால  அடிப்பையில் பதவி உயர்வு வழங்கவேண்டும் என பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
                                                                                                                                                            இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ஊழியர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி ,சத்தியநாராயணன் ,தாமஸ் ,தாமோதரன் ,துறைமுக ஊழியர்கள் மற்றும் மெரைன் ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo