Onetamil News Logo

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலையப்பள்ளி பொன்விழா ; தலைமையாசிரியர் அருட்சகோதரர் ஏ.மரிய ஜோசப்  ஏற்பாடு   

Onetamil News
 

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலையப்பள்ளி பொன்விழா ; தலைமையாசிரியர் அருட்சகோதரர் ஏ.மரிய ஜோசப்  ஏற்பாடு   


 தூத்துக்குடி 2019 நவம்பர் 14 ;தூத்துக்குடியில் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலையப்பள்ளிக்கு பொன்விழா நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் பள்ளித் தலைமையாசிரியர் அருட்சகோதரர் ஏ.மரிய ஜோசப் செய்தியாளர்களிடம் கூறியதாவது... அலைகடல் தவழும் முத்துமாநகரில் அன்னை மரியாளின் பெயர் கொண்ட புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலையப்பள்ளியானது 1969 -ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 25-ஆம் நாள் பாளையங்கோட்டை திரு இருதய சபை அருட்சகோதர்களால் தொடங்கப்பட்டது.ஏழை மாணவர்களுக்குக் கல்வியையும், விடுதலையையும்,நாளொழுக்கத்தையும் நல்கிட இப்பள்ளி அருட்சகோதரர் ஏ.தாமஸ்,பெருமுயற்சியால் அருட்சகோதரர் எம்.ஜோசப் தாளாளராகவும், அருட்சகோதரர் ஏ.விசுவாசம், தலைமையாசிரியராகவும், கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.இவர்களின் அயராத உழைப்பாலும் பேராற்றலையும் இந்த நிறுவனம் என்றுமே மறவாது.1979 -ம் ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளியாக இருந்த எம் பள்ளி மேல்நிலையப்பள்ளியாக உயர்த்தப்பட்டது.தற்போது அருட்சகோதரர் ஐ.ஜோசப் பள்ளியின் தாளாளராகவும் நாங்கள் சிறப்பான முறையில் வழி நடத்தி வருகிறோம். எங்கள் பள்ளியின் நோக்கம் கல்வி வழி விடுதலை என்னும் விருதுவாக்கினைப் பள்ளியின் குறிகோளாகக் கொண்டு மாணவச் செல்வங்களுக்குக் கல்வி அறிவோடு ஆன்மீக உணர்வையும், நாட்டுப்பற்றினையும், அறநெறியையும் வாழ்வின் அடிப்படை விழுமியங்களையும் கற்பித்து நாட்டின் வருங்கால நற்குடி மக்களாக வாழ வழிகாட்டுகின்றது.எமது பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தமிழ் வழிக்கல்வியும்,ஆங்கிலவழிக்கல்வியும் நடத்தப்பட்டு வருகிறது.ஏழை மாணவர்கள் தங்கிப்பயில புனித மரியன்னை கருணை இல்லம் செயல்பட்டுவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo