அரசு தரப்பில் காலியாக உள்ள 2 ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்கள் வரும் 22 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி 2019 நவம்பர் 9 ;தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில், அரசு தரப்பில் காலியாக உள்ள 2 ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்கள் 22.11.2019 விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ;தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில், அரசு தரப்பில் காலியாக உள்ள 2 (இரண்டு) ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு பின்வரும் இனசுழற்சி முறைக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்; வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் உரிய கல்வித் தகுதி மற்றும் இதர சான்றுகளின் சான்றொப்பமிடப்பட்ட ஒளிமநகல்களுடன் 22.11.2019 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேர்காணல் நடைபெறும் தகவல் தனியே கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
1. இனசுழற்சி விபரம்
1 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் (முன்னுரிமையற்றவர்)
MBC & DC - Non Priority -- 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில், தகுதியான நபர்கள் கிடைக்கப் பெறாததால் பின்னடைவு பணியிடமாக அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
2 பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) (முன்னுரிமையற்றவர்) BC (Otherthan BC Muslims) -Women - Non Priority பெண் --
1 கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2 தொழில்நுட்ப தகுதி மோட்டார் வாகன சட்டம் 1988 (மத்திய அரசு சட்டம் 59/1988)-ன் கீழான தகுதியுடைய அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.
3 வயது (01.07.2019 அன்று) 18 வயதுக்கு குறையாமலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
4 இதர தகுதி வாகனம் ஓட்டுவதில் 5 வருடங்களுக்கு குறையாத அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
5 ஊதியக் கட்டு ரூ.19500- 62000; (நிலை - 8)
1. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு),
இரண்டாம் தளம் - கோரம்பள்ளம் - 628 101.
தூத்துக்குடி.
(தொலைபேசி எண். 0461-2340579)
ஈப்பு ஓட்டுநருக்கான விண்ணப்பப் படிவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) அலுவலகத்திலும், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Career Service Portal) www.ncs.gov.in மற்றும் தூத்துக்குடி மாவட்ட இணையதளம் www.thoothukudi.nic.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்:
1. தூத்துக்குடி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் இதர சான்றிதழ்கள் நகலினை சான்றொப்பம் பெற்று விண்ணப்பதுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
3. விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரிசீலனையில் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
4. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 22.11.2019 அன்று மாலை 5.45 மணி.
5. நேர்காணல், திறனறி தேர்வு (Skill Test) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
6. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விபரம் தனியே அஞ்சல்; மூலம் தெரிவிக்கப்படும்.
7. நியமனத்தை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.