Onetamil News Logo

அதி நவீன மின்னணு வாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் பணிகளை மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்.

Onetamil News
 

அதி நவீன மின்னணு வாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் பணிகளை மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி 2019 மார்ச் 12 ;தூத்துக்குடி மாவட்டத்தில் செய்திமக்கள் தொடர்பு துறையின் அதி நவீன மின்னணு வாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் பணிகளை மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணுவாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடும் பணிகள் துவக்கநிகழ்ச்சிஇன்று (12.03.2019) நடைபெற்றது. மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சென்று குறும்படம் திரையிடும் பணிகளை துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்டஆட்சித்தலைவர்/மாவட்டதேர்தல் அலுவலர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 10.03.2019 அன்று நடைபெறும் என்று அறிவித்துள்ளது.  அதனைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,பறக்கும் படை அலுவலர்கள், நிலையான குழு அலுவலர்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்களுடன் ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தனியார் இடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பர பதாகைகளைதேர்தல் அறிவித்;த 72 மணிநேரத்திற்குள் சம்பந்தப்பட்டநபர்களால் அகற்றப்படவேண்டும் உள்ளிட்டதேர்தல் விதிமுறைகள் தெளிவாகஎடுத்துக்கூறப்பட்டது.தேர்தல் நன்னடத்தைவிதிமுறைகள் அமலுக்குவந்தவுடன் பறக்கும்படை அலுவலர்கள், நிலையான குழு அலுவலர்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்களின் மூலம் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் நடைபெற உள்ள எந்தவொரு வாக்காளரும் விடுபட்டு இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு கட்டங்களாக தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (ஏஏPயுவு) பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்குகளை 7 வினாடிகள் பார்த்து அவர்களே உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் ஒப்புகைசீட்டு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், நடை பெற உள்ள தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளை பதிவு செய்யவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குசாவடி மையங்களில் தேவையான சாய்வுதளம் வசதிகள்,சக்கரநாற்காலி உள்ளிட்டபல்வேறு வசதிகள் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.  
இது வரை நமது மாவட்டத்தில் சுமார் 11,000 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளார்கள். இவர்கள் எந்தவிதமான மாற்றுத்திறன் கொண்டவர்கள் என்பதையும், எந்தவாக்குசாவடி மையங்களில் வாக்களிக்க உள்ளார்கள் என்பதையும் கணக்கெடுக்கப்பட்டு,அவர்களுக்குவாக்கு சாவடி மையங்களில் அவர்களுக்கு தேவையானவசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணுவாகனத்தின் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (ஏஏPயுவு) குறித்தும் விழிப்புணர்வு குறும்படங்கள் மாவட்டம் முழுவதும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன மின்னணுவாகனத்தின் மூலம் மாநகராட்சி,நகராட்சிகள்,பேரூராட்சிகள்,ஊராட்சிபகுதிகள்மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறும்படம் மூலம் விழிப்புணர்வுபணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் இன்று துவக்கப்பட்டுள்ளது.நடைபெற உள்ள தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர்  தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், ,தூத்துக்குடிசார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன்,,உதவிஆட்சியர் (பயிற்சி) மரு.அனு, ,செய்திமக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகபொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, தூத்துக்குடி வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம், உதவிமக்கள் தொடர்பு அலுவலர்கள் நி.சையத் முகம்மத்,.ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo