Onetamil News Logo

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவியை மஹாளய அமாவாசை தினத்தில் நிஜமான நாகபாம்பு நேரில் வந்து வழிபட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது பக்தர்களிடத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Onetamil News
 

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவியை மஹாளய அமாவாசை தினத்தில் நிஜமான நாகபாம்பு நேரில் வந்து வழிபட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது பக்தர்களிடத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவருக்கு மிகப்பிரமாண்டமான ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் முப்பெரும் தேவியர்களாக ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, ஸ்ரீமஹாசரஸ்வதி,-மஹாலெட்சுமி தேவியர்களும், மஹாகாலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஸ்ரீசித்தர் பீடத்தில் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஸர்வ மஹாளய புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று(8ம் தேதி) உலகமக்கள் அனைவரும் நோயின்றி நலமாக வாழவேண்டியும், உலகில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், தமிழகத்தில் பருவமழை நன்றாக பெய்து பசுமை வளம் சிறக்கவேண்டியும் ஒரு இலட்சத்து எட்டு எலுமிச்சை பழங்களுடன் மஹா யாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 
சிறப்பு மஹா யாகத்திற்கான வழிபாடுகள் அனைத்தும் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குருசீனிவாச சித்தர் தலைமையில் துவங்கி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பக்தர்கள் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவியின் கருவறை முன்பாக சென்று தரிசித்து கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், கோவிலின் வெளியே காட்டுப்பகுதியில் இருந்து கோவிலுக்குள் ஜோடியாக நுழைந்த சாரை மற்றும் நாகபாம்பு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவியின் முன்பாக தரிசித்தபடி நின்றது. அதன்பின்பு தேவியின் மீது ஏறி நின்று ஆடியபடி படம் எடுத்த வடிவில் பக்தர்களுக்கு காட்சியும் கொடுத்தது.
நிஜமான நாகம்&சாரைப்பாம்பு திடீரென்று வந்து ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மீது நின்று காட்சி கொடுத்ததை பார்த்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து போனதுடன் பயபக்தியுடன் வணங்கினர். சிறிதுநேரத்திற்கு பின்பு பாம்புகள் வந்தது போன்று அப்படியே இறங்கி வெளியே வந்து காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டன.
தொடர்ந்து ஒரு இலட்சத்து எட்டு எலுமிச்சை பழங்களுடன் சிறப்பு மஹா யாகமும், பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மஹாதீபாரதனையும் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பக்தர்கள், திரளாக பங்கேற்று வணங்கிச்சென்றனர். வழிபாடுகளைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குருசீனிவாச சித்தர் கூறியதாவது, இந்த நாகபாம்பு கடந்த பல மாதங்களாகவே அவ்வப்போது கோவிலுக்குள் உலாவி வந்ததை நான் உட்பட பக்தர்கள் சிலர் பார்த்துள்ளோம். அம்பாளின் ஆலயம் இயற்கையாகவே காட்டுப்பகுதியில் இருப்பதால் நாகபாம்பு வந்து சென்றிருக்கலாம் என்று நான் எண்ணியிருந்தேன். 
இந்தநிலையில் ஸர்வ மஹாளய புரட்டாசி அமாவாசை நாளில் நான் கண்ட நாகபாம்பு தனது ஜோடியான சாரைப்பாம்புடன் சேர்ந்து வந்து அம்பாளை தரிசித்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது எல்லாம் என் அன்னையின் அருளே ஆகும், இந்த நாகவழிபாடு காட்சியை கண்ட பக்தர்கள் அனைவருக்கும் வாழ்வில் வேண்டும் வரங்கள் யாவும் கிடைத்திடும் என்றார்.
ஒரு லட்சத்து எலுமிச்சைப்பழ சிறப்பு மஹாயாக வழிபாடுக்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், சித்தர்பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். 
''நிழல் அல்ல நிஜம்'' என்று சொல்லும் வகையில் நாகபாம்பு தனது ஜோடியான சாரைப்பாம்புடன் நேரில் வந்து அம்பாளை தரிசித்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்த பக்தி மிகுந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo