Onetamil News Logo

தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மெகா தூய்மை பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் 

Onetamil News
 

தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மெகா தூய்மை பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 19 ; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மெகா தூய்மை பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மெகா தூய்மை பணிகள் மேற்கொள்வது தொடர்பான தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், தலைமையில் இன்று (18.10.2019) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் மெகா தூய்மை செய்யும் பணிகள் நாளை துவக்கப்பட உள்ளது. நமது மாவட்டத்தில் 45 இடங்களை தேர்வு செய்யப்பட்டு தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், அப்பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர். இந்த மெகா தூய்மை பணி காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. தூய்மைப் பணியில் ஈடுபடும் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான உணவு வசதிகள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் செய்து தரப்பட வேண்டும். தூய்மைப் பணியில் ஈடுபடும் நபர்கள் கையுறைகளை பயன்படுத்தி குப்பைகளை அகற்றும்  பணியில் ஈடுபட வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக வாகனங்களில் தூய்மை செய்யும் இடங்களுக்கு அழைத்து வர வேண்டும். மெகா தூய்மை பணிகளுக்காக துவக்கப்பட்ட வாட்ஸ் அப் குருப்பில்  இதுவரை இணையாத ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தங்களை இணைத்துக் கொண்டு தகவல் பரிமாற்றத்தினை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் நாளை மேற்கொள்ளப்படும் மெகா தூய்மை பணிகள் பொது மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் சிம்ரோன் ஜித் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா சங்கர், செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo