Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் கெரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் கெரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.


ஸ்ரீவைகுண்டம் ,2020 பிப்.20:ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் ‘கெரோனா வைரஸ்’ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சங்கரபாண்டியன் வரவேற்றார்.
கருத்தரங்கில், தூத்துக்குடி மாவட்ட பூச்சியியல் நிபுணர் ஆனந்தன் ‘கெரோனா வைரஸ்’ குறித்தும், டாக்டர். ராமசர்மா நோய் தடுப்பு முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஏரல் முருகேசன், ஸ்ரீவைகுண்டம் பிச்சாண்டி, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சாந்தி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். முடிவில், செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo