Onetamil News Logo

இடையர்காட்டில் மாணவர்களை ஆசிட் கொண்டு கழிவறை சுத்தம் செய்ய சொல்லி மாணவர்களுக்கு கொடுங்காயம் ஏற்பட காரணமாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை ;வக்கீல் இ.அதிசயகுமார்,புகார் 

Onetamil News
 

இடையர்காட்டில் மாணவர்களை ஆசிட் கொண்டு கழிவறை சுத்தம் செய்ய சொல்லி மாணவர்களுக்கு கொடுங்காயம் ஏற்பட காரணமாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை ;வக்கீல் இ.அதிசயகுமார்,புகார் 


தூத்துக்குடி,2019 டிசம்பர் 5 ; இடையர்காட்டில் மாணவர்களை ஆசிட் கொண்டு கழிவறை சுத்தம் செய்ய சொல்லி மாணவர்களுக்கு கொடுங்காயம் ஏற்பட காரணமாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை ;வக்கீல் இ.அதிசயகுமார்,புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், இடையர்காடு, TDTA நல்ல மேய்ப்பர் உயர்நிலைப் பள்ளியில் பட்டியல் இன மாணவர்களை ஆசிட் கொண்டு கழிவறை சுத்தம் செய்ய சொல்லி மாணவர்களுக்கு கொடுங்காயம் ஏற்பட காரணமாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தப்பித்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு,சட்ட ஆலோசகர்,இ.அதிசயகுமார், அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது.....
நான் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக இருந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளில் நடைபெறும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு, அதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன். 
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட இடையர்காட்டில் TDTA நல்ல மேய்ப்பர் உயர்நிலைப் பள்ளி எனும் அரசு உதவிப்பெறும் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 1 முதல் 10 வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இப்பள்ளியில் 500 மாணவர்களுக்கு மேல் கல்விப் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் 7ம் வகுப்பு பிரிவில் சுமார் 45 மாணவர்கள் கல்விப் பயின்று வருகின்றார்கள். இந்த பள்ளியில் வழக்கம்போல     5-12-2019 அன்று காலை 9.00 மணிக்கு வகுப்புகள் துவங்கியுள்ளது. மேற்படி    7ம் வகுப்பில் காலை முதல் ஆங்கில பாடப்பிரிவு நடந்து முடிந்துள்ளது. 2வது பாடப்பிரிவின் நேரமான காலை 11.00 மணிக்கு உடற்கல்வி வகுப்பு நடைபெற வேண்டும். அந்த வகுப்பின் போது அப்பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஜெகன்         6 மாணவர்களை அப்பள்ளியின் கழிவறையையும், ஆய்வகத்தையும் சுத்தம் செய்ய தலைமையாசிரியரிடம் 7ம் வகுப்பு மாணவர்களான மகாராஜா (வயது 12), பிரமோத் பாலா (வயது 12), முருகராஜ் (வயது 12), விஜயகுமார் (வயது 12), முகேஷ் (வயது 12), வாசுராஜன் (வயது 12) ஆகிய 6 பேர்களை அனுப்பி வைத்துள்ளார். தலைமையாசிரியர் 6 பேரையும் ஆய்வகத்திலிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து கழிவறையினை சுத்தம் செய்ய சொல்லியுள்ளார். பின்னர் ஆய்வகத்திற்கு வந்த தலைமையாசிரியர் பிரேம்குமார் மாணவர்களை அங்கிருந்த அமில பாட்டில்களை எடுத்துக் கொண்டு தான் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் கொண்டு போடச் சொல்லியுள்ளார். அப்பொழுது மேற்படி 6 மாணவர்களும் ஏராளமான பாட்டில்களை எடுத்துச் சென்று குழியில் போட்டுள்ளனர். கடைசியாக மகாராஜாவும், பிரோமோத்பாலாவும் இரண்டு அமில பாட்டில்களை எடுத்துக் கொண்டு ஆய்வக வாசலை தாண்டி வரும்போது பின்னால் வந்த மற்ற 4 மாணவர்களும் ஒருவருக்கொருவர் மோதியதில் அமில பாட்டிலானது உடைந்து மகாராஜா மீதும், பிரோமோத் பாலா மீதும் விழுந்துள்ளது. இதனால் மகாராஜாவுக்கு இடது கை முழுவதும் காயம் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். அதேபோல பிரோமோத் பாலாவிற்கு இரண்டு கால் பகுதியிலும் ஆசிட் கொட்டியதினால் காயம் ஏற்பட்டு இருவரும் அலறி துடித்துள்ளார்கள். உடனே அங்கிருந்த தலைமையாசிரியர் தான் செய்த தவறை மறைப்பதற்காக அப்பள்ளியின் கிளார்க் ரத்தினகுமாரை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள ஏரல் சரவணக்குமார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பள்ளி மாணவர்கள் காயம் ஏற்பட்டிருப்பதனை பார்த்தவுடன் மருத்துவம் அளிக்காமல் நீங்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று அறிவுறித்துள்ளார்கள். ஆனால் மேற்படி தலைமையாசியர் பிரேம்குமாரும், கிளார்க் ரத்தினகுமாரும் மேற்படி மாணவர்களை காரில் அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்காமல் தூத்துக்குடியிலுள்ள பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான தூத்துக்குடி டயோசீசன் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்கள். இத்தகவல் தெரிய கேட்டு நான் தூத்துக்குடி மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன். அவர்கள் அங்கு சென்று விசாரித்ததின்பேரில், அந்த பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட மருத்துவமனையிலிருந்து உடனே மாற்றம் செய்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்துள்ளார்கள். மேற்படி மருத்துவமனையில் மகாராஜாவும், பிரோமோத்பாலாவும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 
மேற்படி பள்ளியில் உடற்கல்வி வகுப்பில் தலைமையாசிரியர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்திய மாணவர்கள் 6 பேரும் பட்டியல் இன வகுப்பைச் சார்ந்தவர்கள். மேற்படி தலைமையாசிரியர் மாணவர்களை ஒருவித உள்நோக்கத்துடன் இவர்களை கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தியுள்ளார். இதனால் மாணவர்கள் இருவருக்கும் கொடுங்காயம் ஏற்பட்டு மிகுந்த மனஉளைச்சலுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 
ஆகவே  மாவட்ட ஆட்சித் தலைவர் , பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஆய்வகத்திலுள்ள அமிலக் கழிவுகளை அகற்ற சொல்லி, கவனக்குறைவால் செயல்பட்டதால் இரண்டு மாணவர்களுக்கு கொடுங்காயம் ஏற்பட காரணமாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் ஜெகன், தலைமையாசிரியர் பிரேம்குமார், பள்ளியின் தாளாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பட்டியல் வன்கொடுமை சட்டப்படியும் வழக்கு தொடர்ந்து மாணவர்களின் நலன் காத்து, மேற்படி இரண்டு மாணவர்களுக்கும், பள்ளியிலுள்ள மற்ற மாணவர்களுக்கும் நல்ல கலந்தாய்வு வழங்கிட இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo