Onetamil News Logo

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ50 கோடிக்கு மீன்கள்  ஏலம் மீனவர்கள் மகிழ்ச்சி   

Onetamil News
 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்  ரூ50 கோடிக்கு மீன்கள்  ஏலம் மீனவர்கள் மகிழ்ச்சி   


                                                             
தூத்துக்குடி  2019 ஜூன் 15 ; தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.                                                                                            
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டது.
 இதனால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 412 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளில் 67 விசைப்படகுகள் 24 மீட்டர் நீளத்துக்கு அதிகமாக உள்ளன. இந்த படகு உரிமையாளர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளனர். அந்த படகுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இன்று அதிகாலை 3 மணி (15-ந் தேதி) முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் பதிவு செய்யப்பட்ட 158 விசைப் படகுகளில் 139 விசைப் படகுகளும்,பதிவு செய்யப்படாத 92 விசைப் படகுகளில் 73 விசைப் படகுகளும் கடலுக்கு  சென்று வந்தனர். இதில் காரல், குருவளை, ஊளி, பாறை,  போன்ற மீன்கள் அதிக அளவில் பிடிபட்டன. சுமார் 20 கிலோ எடை கொண்ட குருவளை மீன்கள், சுமார் 30 கிலோ எடை கொண்ட பாறை மீன்களும் பிடிபட்டு இருந்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.. மீன்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இரவு  9 மணி முதல்12 மணி வரை  ரூ50 கோடிக்கு  மீன்கள்  ஏலம் விடப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி  அடைந்தனர்.                                                                                                                                            
இன்று  இரவு மீன்களை வாங்குவதற்காக கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் குவிந்து காணப்பட்டனர். இதனால் துறைமுகத்தில் மீனவர்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. கடந்த 61 நாட்களாக களையிழந்து காணப்பட்ட மீன்பிடி துறைமுகம் இன்று  முதல் மீண்டும் களைகட்ட தொடங்கி விட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo