Onetamil News Logo

தூத்துக்குடியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்வு   

Onetamil News
 

தூத்துக்குடியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்வு   


தூத்துக்குடி, 2020 மே 27 ; தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்து உள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடந்த சில வாரங்களாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் மாவட்ட எல்லைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருந்த 8 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் எட்டயபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 76 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்து உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo