Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில்  12 ம் அரசுப் பொதுத் தேர்வில்  20923 மாணவ / மாணவிகள் தேர்வு எழுதி 19985 மாணவ / மாணவிகள்  தேர்ச்சி

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில்  12 ம் அரசுப் பொதுத் தேர்வில்  20923 மாணவ / மாணவிகள் தேர்வு எழுதி 19985 மாணவ / மாணவிகள்  தேர்ச்சி


தூத்துக்குடி  2018 மே 16 ; தூத்துக்குடி மாவட்டத்தில்  12 ம் அரசுப் பொதுத் தேர்வில்  20923 மாணவ / மாணவிகள் தேர்வு எழுதி 19985 மாணவ / மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.                                                                                                        
 இது குறித்து முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.. தூத்துக்குடி மாவட்டத்தில்  நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு அரசுப் பொதுத் தேர்வில்  20923 மாணவ / மாணவிகள் தேர்வு எழுதி 19985 மாணவ / மாணவிகள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.  இது 95.52 சதவீதம் ஆகும்.    தேர்விற்காக உழைத்த தலைமையாசிரியர்கள் /  ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்கள்  அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம்  சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  
இத்தேர்வில் தேர்ச்சி வாய்ப்பை இழந்த மாணவ / மாணவிகளுக்கு உடனடியாக  ஜுன் மாதம் 25ம் தேதி நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வில்  பங்கு பெற்று மீண்டும் தேர்வு  எழுதி, தேர்ச்சி பெற்று,  மற்ற மாணவர்களை போன்று உயர்கல்வி பெறுவதற்கு வாய்ப்புள்ளது.  
  மாணவ மாணவியர்கள்  மதிப்பெண் குறைந்த காரணத்திற்காகவோ அல்லது  வெற்றி பெறாத காரணத்திற்காகவோ எக்காரணம்  கொண்டும் தன்னம்பிக்கை இழக்காமல் அதே  நேரத்தில்  தவறான  முடிவுகளை மேற்கொள்வதை தவிர்த்திடல் வேண்டும்.  பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஆறுதலும், தன்னம்பிக்கையும் கொடுக்க வேண்டும்.
அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மன சோர்வுடன் உள்ள மாணவ / மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவிலும் / பெற்றோர்களும் அவர்கள் மன சோர்விலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பெறுவதற்கான  ஆலோசனைகளை வழங்க வேண்டும்.  
மேலும் தமிழக அரசு 24 மணி நேரமும்  செயல்பட கூடிய  உடனடி தகவல் மையம் பள்ளிக்கல்வி  இயக்கத்தில் செயல்பட்டு வருகிறது.  குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி வாய்ப்பை இழந்த மாணவ /  மாணவர்கள் / பெற்றோர்கள், இம்மையத்தை 14417 மற்றும் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகளை பெறலாம்.  
இம்மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மன நல வல்லுநர்கள் இம்மையத்தில் பணிபுரிந்து வருகின்றார்கள்.   எனவே பெற்றோர்கள் மிக கவனத்துடன்  இருந்து,  தங்களது பிள்ளைகளை, அவர்கள் மறு தேர்வில் தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம் என்ற தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும்  அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் என்.வெங்கடேஷ்  அறிவுறுத்தியுள்ளார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo