Onetamil News Logo

தமிழ் கலைகளை அழிக்கும் செண்டை மேளம்? தமிழர்களின் நையாண்டி மேளம்  மறைந்து விடுமா?..

Onetamil News
 

தமிழ் கலைகளை அழிக்கும் செண்டை மேளம்? தமிழர்களின் நையாண்டி மேளம்  மறைந்து விடுமா?..


தூத்துக்குடி  2019 ஜூன் 1 ; தமிழ் கலைகளை அழிக்கும் செண்டை மேளம்  தடை செய்யப்படுமா? 
கலை என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் கவின் (அ) அழகியல் கலைகள் (asthetic arts) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் தொழில்நுட்பக் கலைகள் (fine arts)என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்.  தாளத்துக்கும், இசைக்கும் ஒத்தசைவாக உடலை நகர்த்தும் கலை வடிவம் நடனம். சமூகம், பண்பாடு, சமயம் சார்ந்தோ, சார்பற்ற மகிழ்ச்சிக்காகவோ நிகழ்த்திக்காட்டும் நிகழ்கலையாகவோ கொள்ளப்படும். சில விலங்கினங்களில் இனப்பெருக்கத்திற்காக துணையைக் கவரும் விதமாக அவைகளால் நிகழ்த்தப்படுகிறது. 
                                    
செண்டை என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி பரவலாகக் கேரளம், கருநாடக மாநிலத்தின் துளு நாடு பகுதி மற்றும் இன்று தமிழகத்தில் அணைத்து விழாக்களிலும் பயன்படுத்தப்படுகிறது.இதனால் கேரளாவுக்கு 100 கோடி வருமானத்தை தமிழர்கள் தாரை வார்க்கின்றனர்.                                                                                                                         
 செண்டை மேளம் பண்டைய தமிழ் இசை தோற்கருவி "கொடுகொட்டி" என்பதன் பரிணாம வளர்ச்சியே ஆகும். செண்டை 18ம் நூற்றாண்டில் முழுமையான தற்கால வடிவம் பெற்றது.
செண்டை நீண்ட உருளை வடிவத்திலுள்ள மரக்கருவியாகும். இது இரண்டு அடி நீளமும் ஓரடி விட்டமும் கொண்டது. இதன் இரண்டு முனைகளும் செண்டை வட்டங்களால் மூடப்பட்டிருக்கின்றன. பொதுவாக இது பசு மாட்டின் தோலால் உண்டாக்கப்படுகிறது. காளை மாட்டின் தோல் இதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. தரம் மிக்க ஒலியிற்காக பசு மாட்டின் அடி வயிற்று தோல் பயன்படுத்தப்படுகிறது. செங்குத்தாக வைப்பதற்காக வாசிப்பவர்களின் தோளிலிருந்து தொங்கவிடப்படுகிறது. செண்டையின் மேல் பகுதியில் மட்டும் கோல் கொட்டப்படும்.
உரத்த விறைப்பான ஒலியிற்காக இப்பறை பிரசித்தி பெற்றது. செண்டையிற்கு இரண்டு பக்கமுண்டு, இடது பக்கம் இடந்தலை மற்றும் வலது பக்கம் வலந்தலை. இடந்தலை ஒன்று/இரண்டு அடுக்கு மாட்டு தோலும், வலந்தலை ஐந்து/ஏழு அடுக்கு மாட்டு தோலும் கொண்டது. இத்தோல்கள் நிழலில் உலர்ந்த பிறகு செண்டை வட்டத்துடன் கட்டப்படுகிறது. செண்டை வட்டம், ஈரப்பனை அல்லது மூங்கில் மரத்தால் உண்டாக்கப்பட்டது. கட்டுவதற்காக பனிச்சை மரத்தின் விதைகளை கொண்ட பசை உபயோகிக்கப்படுகிறது. வட்டக்கட்டமைப்பை ஒரு பாத்திரத்தில் வைத்து, ஒரு நாள் முழுவதும் கொதிக்க வைத்த பின் வட்டமாக வளைக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. செண்டையின் உடற்பகுதி 2அடி 36 அங்குலம் விட்டமும் 1.5 அங்குலம் தடிமானமும் கொண்டது. இது பலாமரத்தின் இளமரத்தால் செய்யப்படுகிறது. பின் தடிமானம் 0.25 அங்குலங்களுக்கு குறைக்கப்பட்டு ஒருமித்த புள்ளியியல் தள்ளி வைக்கப்படுகிறது. நன்கு அதிர்வொலியிற்காக இது செய்யப்படுகிறது. வருடத்தில் சராசரியாக ஒரு பறையாளர் 15 முறை மரகட்டமைப்பை மாற்றுவர். செண்டை பெரும்பாலும் இந்து விழாக்களில் பயன்படுத்தப்படும். செண்டை கேரளத்தின் 1. கதைகளி 2. கூடியாட்டம் 3. கண்யர்களி 4. தெய்யம் மற்றும் பல சமஸ்தான நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகத்திலும் யக்ஷகான கலையில் பயன்படுத்தப்படுகிறது.
செண்டை உருவாக்கும் கலை இன்று சில பெரும் கொள்ளர் குடும்பங்களுடனே உள்ளது. பெருவேம்பை, இலக்கிடி, நென்மாறை, வெள்ளார்காடு, வலப்பயை கிராமங்களில் செண்டை தயாரிக்கப்படுகிறது. வெள்ளார்காடு செண்டை மிகவும் புகழ்பெற்றது.கேரளத்தின் திருச்சூர் பூரத்தில் கேரள மாநிலத்தில் உள்ள செண்டைக் கலைஞர்கள் ஒன்று கூடி இசைப்பர். 
                                           
தமிழர்களின் நையாண்டி மேளம் மறைந்து விடுமா?....நையாண்டி மேளம் அடித்தால் தான் சாமி வருகிறது. .....கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், முதலியன தமிழகத்தின் கிராமப்புறங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வளர்த்தெடுக்கப்பட்ட நாட்டுப்புறம் சார்ந்த நடன வகைகளாகும்.                                                                      
கலை, திறமைக்கும், ஆளுமைக்கும் ஒப்பான அறிவியல் நுட்பத்தின் பகுதியாகக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அழகியல் முதன்மை பெற்று கற்பனை வளம், திறன் சார்ந்து பயனுறு கலைகளாகவும், நுண்கலைகளாகவும் பகுத்தாயப்பட்டன. கலையானது நிலை, நிகழ்வின் நகலாக்கம், கதைப்புனைவு, நிகழ்வின் வெளிப்பாடு, உணர்ச்சிகளின் தொடர்பு மற்றும் இதர தரவுகளைக் கொண்டிருக்கலாம். உரோமாயர்களின் கலை வரலாறானது மனிதனின் மதம் மற்றும் அறிவியல் தொடர்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது                            
                                          
தமிழர் இசைக் கருவிகள் இரு கூறாகப் பிரிக்கப்படுகிறது. பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.                                                                                                                                                                                                      
                                                                                                                                                                                             
நையாண்டி மேளம் என்பது காவடி, கரகம், முதலியவற்றுக்குப் பொருந்துமாறு அடிக்கும் மேள வகையாகும்.நையாண்டி மேளம் கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணி இசையாக இடம் பெறுகின்றது. திறந்தவெளி அரங்கில் நையாண்டி மேளக் குழுவினரால் வட்டமாக நின்று கொண்டு இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன.   கரகாட்டத்திற்கு நையாண்டி மேளம் பக்க இசையாக நிகழ்த்தப்படுகிறது. நையாண்டி மேளம் இரு நாதசுவரம், இரு தவில்களும் முதன்மை இசைக்கருவியாகவும், பம்பை, உறுமி, கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, கோந்தளம், ஒரு சுதிப்பெட்டி, ஒரு தாளம் போன்ற இசைக் கருவிகள் பக்க இசையாகவும் அமையும். இப்பக்க இசையில் நாதசுரக் கலைஞர்கள் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து கொண்டும் ஆட்டக் கலைஞர்களுடன் இணைந்து ஆடியும் நிகழ்த்துவதால் இந்தப் பக்க இசை (பக்க வாத்தியம்) நையாண்டி மேளம் என்று அழைக்கப்படுகிறது. கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமையப்பெறுகிறது.                                                                                                                    
அம்மன் கூத்து அன்னக்கொடி விழாக்கூத்து அனுமன் ஆட்டம் ஆலி ஆட்டம் இருளர் இனமக்களின் ஆட்டம் இலாவணி எக்காளக் கூத்து ஒயில் கும்மி ஒயிலாட்டம் கணியான் கூத்து கரகாட்டம் கரடியாட்டம் கழியலாட்டம் காவடியாட்டம் கும்மியாட்டம் குரவைக் கூத்து குறவன் குறத்தி ஆட்டம் கொக்கலிக்கட்டை ஆட்டம் கோணங்கியாட்டம் கோலாட்டம் சக்கையாட்டம் சலங்கையாட்டம் சாமியாட்டம் சிலம்பாட்டம் சேவயாட்டம் தப்பாட்டம் துடும்பாட்டம் துணங்கைக் கூத்து தெருக்கூத்து தேவராட்டம் பரதநாட்டியம் பறைமேளக் கூத்து பறையாட்டம் பாம்பாட்டம் பாவைக்கூத்து புலி ஆட்டம் பூசாரிக் கைச் சிலம்பாட்டம் பெரியமேளம் பொம்மலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் மகுடிக் கூத்து மயில் ஆட்டம் மரக்காலாட்டம் மாடாட்டம் ராஜா ராணி ஆட்டம் வள்ளிக்கூத்து வெறியாட்டு ஜிக்காட்டம்                                                                                                    
                                                                                                                                                                                                      தமிழர் கலைகள் பட்டியல்
சிலம்பம்
கோலாட்டம்
பட்டிமன்றம்
வில்லுப்பாட்டு
ஆட்டங்கள்
கும்மி
மயிலாட்டம்
காவடியாட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம்
தெருக்கூத்து
ஒயிலாட்டம்
பாம்பாட்டம்
உருமி ஆட்டம்
புலி ஆட்டம்
பறை ஆட்டம்
கரகாட்டம்
மாடு ஆட்டம்
உறியடி ஆட்டம்
கொல்லிக் கட்டை ஆட்டம்
புலி ஆட்டம்
சிலம்பாட்டம்
குறவன் குறத்தி ஆட்டம்
கைச்சிலம்பாட்டம்
தேவராட்டம்
தப்பாட்டம்
காளியாட்டம்
சேவையாட்டம்
பேயாட்டம்
சாமியாட்டம்
கூத்துக்கள்
சாந்திக் கூத்து
சாக்கம்
மெய்க் கூத்து
அபிநயக் கூத்து
நாட்டுக்கூத்து
விநோதக் கூத்து
குரவைக் கூத்து
கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து'
கரகம் என்னும் 'குடக் கூத்து'
பாய்ந்தாடும் 'கரணம்'
நோக்கு 'பார்வைக் கூத்து'
நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து'
'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு'
பொம்மலாட்டம்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo