Onetamil News Logo

74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்;  தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு

Onetamil News
 

74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்;  தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அன்று நடைபெறவுள்ள 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்;  தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி  மாவட்டத்தில் வரும் 15.08.2020 அன்று, கொரோன தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து நடைபெறவுள்ள நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல முக்கிய அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகிறவர்களின் வாகனங்கள் நுழை வாயிலில் சோதனையிட்டு உள்ளே அனுப்பப்படுகிறது. 
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 96 முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரோந்துப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 18 நெடுஞ்சாலை காவல் ரோந்தும்,  இது தவிர காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 38 சிறப்பு ரோந்துப்படையும் அமைக்கப்பட்டு அவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்கள் அதிகம்  கூடும் இடங்களில் மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள்  தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 அதே போன்று தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதிகளில் 18 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா நடைபெறவுள்ள தூத்துக்குடி தருவை மைதானத்திற்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ்  தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களையும், அவர்களது வாகனங்களையும், போலீசார் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , நேரில் சென்று ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் மற்றும் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo