Onetamil News Logo

தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கேரளாவில் 1000 பேர்களுக்கு ரூ 20 லட்சம் நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு

Onetamil News
 

தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கேரளாவில் 1000 பேர்களுக்கு ரூ 20 லட்சம் நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 25 ;கேரளாவில் இயற்கை சீற்றத்தில் சிக்கி தற்போதுதான் அம்மாநிலம் மீண்டு வந்துள்ளது. அதற்குள் இந்த வருடம் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளான கேரளா, தமிழகத்தின் நீலகிரி, கோவை போன்ற இடங்களில் கடந்த சில நாள்களாகக் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாகக் கேரளாவின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாகக் கேரளாவில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.கேரள மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளா மக்களுக்கு உதவி செய்திட தூத்துக்குடியில் மாவட்ட தலைமை விஜய் ரசிகர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
துாத்துக்குடி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 1000 பேர்களுக்கு ரூ 20 லட்சம் நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது புரட்சிகர இயக்குநரும் விஜய்-ன் தந்தையுமான S.A. சந்திரசேகர் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில் சிவன்கோவில் அருகில் உள்ள தூத்துக்குடி சிட்டி லாரி புக்கிங் ஆபிஸ் ஏஜெண்ட் அசோஸிசேசன் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆலோசனை கூட்டம் இளைய தளபதி விஜய் தலைமை மக்கள் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.சுமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மன்ற சட்ட ஆலோகர் எஸ்.பி.வாரியார் , கோவில்பட்டி செல்வம்  சுந்தர், மாநகர தலைவர் ராயல்,சுந்தர் 1 ம் கேட் பாலா, மாணவரணி சக்திவேல், ஜில்லா பாலா, மட்டக்கடை குமார், 3-வது மைல் ராஜா, கோவில்பட்டி கில்லி கணேஷ், கோவில்பட்டி சுரேஷ் உட்பட 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo