Onetamil News Logo

எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து கொண்டு இருக்கிறார் என்பதை பற்றித்தான் எல்லோருடைய தேர்தல் பிரசாரமும் இருக்கும் ;என்று கனிமொழி எம்.பி. பேச்சு 

Onetamil News
 

எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து கொண்டு இருக்கிறார் என்பதை பற்றித்தான் எல்லோருடைய தேர்தல் பிரசாரமும் இருக்கும் ;என்று கனிமொழி எம்.பி. பேச்சு 


காயல்பட்டினம்  2020 நவம்பர் 21 ;காயல்பட்டினம் கொம்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள கைப்பந்து மைதானத்தை கனிமொழி எம்.பி. தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1½ லட்சம் செலவில் சீரமைத்தார். இதன் திறப்பு விழா நடந்தது. ஊர் தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். 
சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
               மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்ததே தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான். மாற்றுத்திறனாளிகளுக்கு தனி துறை, வாரியம் அமைத்து கொடுத்தவர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடத்தினர். உடனடியாக 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றி தந்தார். நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமையை போராடித்தான் பெற வேண்டும் என்று இல்லாமல், தானாக கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். நமது உரிமையை நேர்மையோடு, அதிகாரத்தோடு பெறக்கூடிய நாள் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கொரோனா வந்ததால், பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி விட்டார். இதனால் அதிகமானவர்களுக்கு இந்த மோட்டார் வாகனத்தை வழங்க முடியாத நிலை உள்ளது. அனைத்து தடைகளையும் உடைத்து, வேறு திறன் நமக்கு உள்ளது என்ற நம்பிக்கை தருவதாக இந்த வாகனம் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் அவலங்களை, எப்படி நாட்டை, நாட்டின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொச்சைப்படுத்தி விட்டுக் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு எப்படி துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பற்றித்தான் எல்லோருடைய தேர்தல் பிரசாரமும் இருக்கும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். தேர்தல் அறிக்கையில் சொல்லப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. மத்திய மந்திரி அமித்ஷா, ஒரு மாநிலத்துக்கு வருவது புதிய விஷயம் அல்ல. எல்லா மந்திரிகளும் வந்து கொண்டு இருக்கிறார்கள்’ என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo