Onetamil News Logo

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து என்று திமுக தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி பேச்சு..

Onetamil News
 

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து என்று திமுக தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி பேச்சு..


தூத்துக்குடி 2019 மார்ச் 15 ;வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பது வாழ்வா சாவா என பார்க்க கூடிய களமாகும். பா.ஜ.க ஆட்சியில் மாநில கட்சிகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடியில் தி.மு.க வடக்கு மாவட்டம் சார்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கலைஞர் அரங்கத்தில் வடக்குமாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி மாவட்ட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
                                                                                                                             கூட்டத்தில் பங்கேற்ற திமுக வேட்பாளர் கனிமொழி பேசியாராவது..நாட்டில் தமக்கு எதிராக எந்த ஒரு கட்சியும் இருக்கக்கூடாது என்பதற்காக தன்னிடம் உள்ள வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்ற அனைத்து துறை அதிகாரங்களையும் பயன்படுத்தி கூட்டணி கட்சிகளை மிரட்டி வைத்துள்ளது.பா.ஜ.கவினரின் கொள்கையிலிருந்து மாறுபட்டவர்கள் என்றால்  அவர்களின் கதி அதோ கதிதான், நடைபெற இருக்கின்ற தேர்தல் என்பது வாழ்வா சாவா என பார்க்க கூடிய களமாகும். பா.ஜ.க ஆட்சியில் மாநில கட்சிகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தப்படுகிறது.பா.ஜ.கவை ஆதரிக்காத கட்சிகள் மீது வன்முறை நடத்தப்படுகிறது. பல வழியில் அச்சுறுத்தப்படுகிறார்கள். இந்த பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இல்லாமல் போய்விடும்.பா.ஜ.கவை ஆதரிக்காத கட்சிகள் இந்த நாட்டில் இருக்க முடியவில்லை. நாம் யாரும் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை, நம் சிந்தனைகளை வெளிப்படுத்த முடியவில்லை. அப்படியொரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஊடகத்துறையை சேர்ந்தவர்கள், சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் தி.மு.க கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo