Onetamil News Logo

வடையில் செத்த பல்லி எதிரொலி ;தூத்துக்குடி ஏ.எம்.டீ கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரெய்டு ;காலாவதியான அணைத்து பொருள்களும் பறிமுதல்   

Onetamil News
 

வடையில் செத்த பல்லி எதிரொலி ;தூத்துக்குடி ஏ.எம்.டீ கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரெய்டு ;காலாவதியான அணைத்து பொருள்களும் பறிமுதல்   


தூத்துக்குடி 2019 ஜூலை 12 ; தூத்துக்குடி அண்ணாநகரில் பிரபல ஏ.எம்.டீ கடையில்  ஆர்டர் செய்த வடையில் செத்த பல்லி ஒன்று இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அண்ணாநகரில் பிரபல ஏ.எம். டீ கடையில்  ஆர்டர் செய்த வடையில் செத்த பல்லி ஒன்று இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி  அண்ணாநகரை சார்ந்த ஒருவர் இன்று  அந்தப் பகுதியில் உள்ள அண்ணாநகர் 10ம் தெரு  அமைந்துள்ள டீ கடையில் வடை சாப்பிடச் சென்றுள்ளார்.அப்பொழுது  ஆர்டர் செய்த  வடையை வாங்கிப் சாப்பிட பிய்த்துள்ளார் அப்பொழுது பார்த்தவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தட்டிலிருந்த வடையில்  ஒரு செத்த பல்லி கிடந்தது. உடனே டீ கடையின் உரிமையாளரை  அழைத்துப் புகாரளித்தவர், அந்தப் பல்லி விழுந்த  வடையைப் புகைப்படமெடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். உடனே அந்த புகைப்படம் வைரலானது. 
வடையில் செத்த பல்லி எதிரொலியால் உடனடியாக தூத்துக்குடி  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் கருணாகரன்  தலைமையில்  வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி காளிமுத்து ,கோவில்பட்டி உணவு பாதுகாப்பு அதிகாரி முருகேசன் ஆகியோர் அண்ணாநகரில் உள்ள  ஏ.எம்.டீ கடையில் ஆய்வு மேற்கொண்டார்கள். 
அப்போது ஏ.எம்.டீ கடைகளில் உள்ள தண்ணீர் பாக்கெட், மோர் பாக்கெட், குளிர் பானங்கள், சாக்லெட், டீ தூள் ஆகியவற்றை எடுத்து பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த கடைகளில் இருந்த பொருட்களில்  முறுக்கு,ஓரே  எண்ணெய் பல மாதங்களாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவை கருப்பாக மாறி உள்ளது.  ஆகையால் 4 லிட்டர் எண்ணெய்யை பறிமுதல் செய்து அவற்றை  அழித்தனர்.
மேலும் கடையில்,காலாவதியான பொருட்கள்  கலப்பட பொருட்கள், தரமற்ற உணவு பொருட்கள், மற்றும் முழுமையான லேபில் இல்லாத பொருட்களை கடைக்காரர்கள் விற்பனை செய்யக் கூடாது என எச்சரித்தனர். மேலும் இது போன்ற தரமற்ற பொருட்களை விற்பனை செய்தால் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo