Onetamil News Logo

வேலையில்லா சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி ; விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு   

Onetamil News
 

வேலையில்லா சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி ; விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு     


 தூத்துக்குடி 2019 செப் 12 ;வேலையில்லா சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம் 2019-20 தூத்துக்குடி மாவட்ட மதவழி சிறுபான்மையினர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன் “Kaushal Se Kushaltha” திட்டத்தின் கீழ் டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பை சார்ந்த இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், வாலஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையம் (CFTI)  மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கும் பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஸ்டிச்சர் கூட்ஸ் ரூ கார்மென்ட்ஸ் மற்றும் பிரி அசெம்பிளி ஆபரேட்டர் ஆகிய பயிற்சிகள் 46 நாட்கள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 நபர்கள் வீதம் மொத்தம் 40 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதவழி சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 லட்சத்திற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்கு  உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இப்பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு ரூ. 1534/- பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும். உண்டு  உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது.
இதற்கான நேர்காணல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலஜாபாத், எண்.64சி, சாலை தெரு, புதேரி, குஜராத்சத்திரம் அருகில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் (CFTI) 20.09.2019 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. மேற்படி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம். இப்பயிற்சி திட்டத்தில் சிறுபான்மையின இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் மத்திய காலணி பயிற்சி நிலையம் (CFTI)  ( மனோகரன் - 8939813412) /தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை,  (தொலைபேசி-044-28514846) ஆகியோர்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo