SDR & ABI குழும நிறுவனர் S.தர்மராஜ் நாடார் வெண்கல சிலை திறப்பு விழா : G.K.வாசன் திறந்து வைத்தார்
தூத்துக்குடி 2019 செப் 14 ;தூத்துக்குடியில் SDR தர்மராஜ் நாடார் சிலையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் GK வாசன் திறந்து வைத்தார்!!!
ஐயா SDR தர்மராஜ் நாடார் ,வெண்கல திருவுருவ சிலை S.தர்மராஜ் நாடார் SDR & ABI Group of Companies வெண்கல திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது
முன்னதாக . தூத்துக்குடி கோரம்பள்ளம்,:SDR பள்ளி வளாக த்தில் ...இன்று 14-09-2019 நடைபெறற நிகழ்ச்சியில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் CSI பேராயர் தேவசகாயம் தேவசகாயம் , ஆரம்ப ஜெபம் செய்தார்.ஒரே மொழி இந்தி மொழி என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என தூத்துக்குடியில் தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி எஸ்டிஆர் குழுமங்களின் தலைவர் எஸ். தர்மராஜ் நாடார் முழு உருவ வெண்கல சிலை கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்டிஆர் பள்ளி வளாத்தில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டு வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கீதாஜீவன் எம்எல்ஏ., முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன், முன்னாள் எம்பி.,ஏடிஜே ஜெயசீலன், தூத்துக்குடி தொழிலதிபர்கள் டிஎஸ்எப் துரைராஜ், சுசீராஜன்.கேபி ராஜா ஸ்டாலின், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் தூத்துக்குடி மாவட்ட தமாகா தலைவரும், எஸ்டிஆர் பள்ளி தாளாளருமான எஸ்டிஆர் விஜயசீலன், அபி குருப் தலைவர் எஸ்டிஆர் பொன்சீலன்,எஸ்டிஆர் சாமுவேல் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் தமாகா தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..., தேசியமாெழியாக 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஏற்க வேண்டும். ஒரே மொழி இந்தி மொழி என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.
முதலில் தாய்மொழி, பின்னர் கற்கும் மொழி, அடுத்து விருப்பமொழி இருப்பதே பொதுமக்களின் விருப்பம். அதுவே தமாகாவின் விருப்பம். அரசியல் கட்சியினர் பேனர்களை தவிர்ப்பது நல்லது. இல்லத்தின் நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்கலாம். இதை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும். பேனர் தொழிலை நம்பி லட்சகணக்கான பேர் உள்ளனர். பாலம்,மைல்கல் போன்றவைகளில் போஸ்டர் ஒட்டுவதை ஒழுங்குபடுத்த வேண்டும்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் தமாகா, கூட்டணிகட்சி ஆதரவோடு பெரும்பாலான இடங்களில் போட்டியிடும். அதிமுக கூட்டணியில் தமாகா தொடர்கிறது. 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்வது நல்லது. திடீரென திணித்தால் மாணவர்கள், பெற்றோருக்கு சுமையாக இருக்கும். உலக அளவில் பொருளாதார தேக்கம் உள்ளது. அந்த பாதிப்பு இந்தியாவில் உள்ளது. பொருளாதார தேக்க நிலையை போக்க அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய அவர் அரசியலமைப்பு சட்டப்படி அனைவரும் சமம். எனவே அவர் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். தமாகா வளர்ச்சி பெற்று வருகிறது. மதுரையில் தமாகா மாநாடு நடைபெற்றது. நல்ல எதிர்காலத்தை நோக்கி தமாகா செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது எஸ்டிஆர் விஜயசீலன் மற்றும் தமாகாவினர் உடன் இருந்தனர்.
அடுத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் SDR ஐயா - வின் திறமைகளையும் அவர்தம் அருமை பற்றி நினைவுகளை பேசினார்கள். இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமாேனேர் கலந்து கெnண்டு சிறப்பித்தார்கள்.
.
(ABI Group of Companies),Chairman, SDR. பொன்சீலன்,தூத்துக்குடி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரூம் SDR. விஜயசீலன்( தெற்கு),SDR School / Managing Director, SDR Polyrnors Pvt. Ltd.,,SDR. சாமுவேல் ராஜ்,(Proprietor, SDR Packaged Drinking Water) ஆகியோர் செய்திருந்தார்கள்.