Onetamil News Logo

18 வயது நிறைவடையாத என்னை திருமணம் செய்யுமாறு பெற்றோர்கள் கட்டாயப்படுத்துகின்றனர் ;தூத்துக்குடி எஸ்.பி யிடம் புகார் 

Onetamil News
 

18 வயது நிறைவடையாத என்னை திருமணம் செய்யுமாறு பெற்றோர்கள் கட்டாயப்படுத்துகின்றனர் ;தூத்துக்குடி எஸ்.பி யிடம் புகார் 


தூத்துக்குடி 2019 மே 15 ;தூத்துக்குடியில் 18 வயது நிறைவடையாத இளம்பெண்ணை  திருமணம் செய்யுமாறு பெற்றோர்கள் கட்டாயப் படுத்துகின்றனர் என்று  எஸ்.பி யிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி ,அண்ணாநகர்  பாண்டியன் மகள் மகாலெட்சுமி 6/6, 6வது தெருவைச் சார்ந்தவர், தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் -யிடம் தெரிவித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது...
நான் மேற்கண்ட முகவரியில் கடந்த மே 1 முதல் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த முள்ளிப்பள்ளம். எனது அப்பா பாண்டியன், தாத்தா பரமசிவன், பாட்டி முத்துப்பிள்ளை, சித்தப்பா ராஜா, அத்தை சீலாதேவி ஆகியோர் எனது விருப்பத்திற்கு மாறாக எனது உறவினருக்கு கட்டாய திருமணம் செய்ய திட்டமிட்டு என்னை கண்டாரஒலி நீ அவனைத்தான் திருமணம் செய்ய வேண்டும் மே மாத இறுதியில் திருமணம் நடக்கும் என கூறினார்கள் நான் அவர்கள் காலில் விழுந்து எனது திருமணம் அவரோடு வேண்டாம் எனக்கு சட்டபடி திருமண வயது வரவில்லை நான் அரசு வேலைக்கு செல்ல வேண்டும். நான் நல்ல நிலைக்கு வரவேண்டும் என கெஞ்சினேன். அதற்கு எனது அப்பா என் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்து கடந்த ஏப்ரல் 25ம் தேதி வீட்டில் இருந்த அறையில் உணவு கூட கொடுக்காமல் அடைத்துவிட்டார். நான் அங்கிருந்து தப்பித்து தூத்துக்குடியில் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். இந்நிலையில் எனது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களின் உறவினர்களான அழகு ராஜா,ராஜ் ஆகியோர்களை காவல்துறையின் மூலமாக பொய் புகாரில் வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நோக்கத்தில் காவல்துறையினர் அழைத்து சென்று மிரட்டி வருகின்றனர். மேலும் எனது அப்பா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் செல்வாக்கு மிக்கவன் உன்னை காவல்துறை மூலமாக தூக்கிவிடுவேன். நான் சொன்ன பையனை நீ திருமணம் செய்யவேண்டும். நீ தப்பித்து சென்றதால் உன்னை கட்டாயம் கொலை செய்து விடுவேன் வேறு வழியில்லை. இதில் எனது கௌரவம் அடங்கி உள்ளது என கூறிவிட்டார். எனக்கு மிகவும் பயமாக உள்ளது. எனது அப்பா மற்றும் மேற்கண்ட எதிரிகளால் எனக்கும் எனது நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உயிர் ஆபத்து உள்ளது.
ஆகவே சமூகம் அவர்கள் என்னை அவதூறாக பேசியும் அடித்து கொடுமை செய்தும் கொலை செய்வேன் என கொலை மிரட்டல் விடுத்தும் கட்டாய திருமணம் செய்ய முயன்றும் வருகின்ற மேற்கண்ட எதிரிகள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் அழகுராஜா, ராஜ் ஆகியோர்களை விடுவிக்கவும் வேண்டுகிறேன் என்று அதில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo