Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி M. சுரேஷ் விஷ்வநாத்  வரும் 13ம் தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்து சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி M. சுரேஷ் விஷ்வநாத்  வரும் 13ம் தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்து சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பு 


 தூத்துக்குடி  2019 ஜூலை 8 ; தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச தீர்வு மையத்தில் இன்று  மதியம் 1.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி M. சுரேஷ் விஷ்வநாத் வரும் 13ம் தேதி  அன்று நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றம் சம்மந்தமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.                                                                                            
இதில் தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி M. சுரேஷ் விஷ்வநாத் கூறுகையில்....
"தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரிலும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பெயரிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில்  அதிக வழக்குகளில் தீர்வு காண்பதற்கு பொதுமக்கள்   நீதிமன்றம் குறித்து நன்கு விழிப்புணர்வு  பெறவேண்டும். மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து சிவில், ஜீவனாம்சம், மணமுறிவு மற்றும் மோட்டார் வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் சமரச முறையில் தீர்வு காணலாம்.
அதன்படி நாளை மறுநாள் (13.07.219) தூத்துக்குடி மாவட்டத்தில் மெகா லோக் அதாலத் நடைபெற உள்ளது. இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள், சிவில் வழக்குகள், செக் மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளன.
இதுவரையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் ரூ.79 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 10 வழக்குகளுக்கும், மோட்டார் வாகன வழக்குகளில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான 25 வழக்குகளுக்கும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரம் வரையிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.அதேபோன்று கோர்ட்டுக்கு விசாரணைக்கு வரும் முன்பே தீர்வு காணப்படும் வங்கி சார்ந்த வழக்குகளில் இதுவரை 756 வழக்குகள் எடுக்கப்பட்டு 102 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரூ.80 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. ஆக மொத்தம் இதுவரை ரூ.2 கோடியே 72 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது.
நாளை சுமார் ரூ.7 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காண வாய்ப்பு உள்ளது. வழக்காடிகள், பணம் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்பநல வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் உடனடியாக தீர்வு காணலாம். இதில் தீர்வு கண்டால் மேல்முறையீடு கிடையாது. சம்பந்தப்பட்ட வழக்காடிகள் செலுத்தி உள்ள கோர்ட்டு கட்டணம் உடனடியாக திருப்பி கொடுக்கப்படும். வங்கியில் கடன் பெற்று உள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முழுமையாக வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் பயன்பெறுவார்கள். எனவே இந்த மக்கள் நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்காடிகளும் பங்கேற்க வேண்டும். இதுதொடர்பாக வழக்காடிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.                                  
                                                                                                                                                  இந்த நிகழ்வில்  மகிளா நீதிமன்ற நீதிபதி குமார சரவணன்,முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சிவஞானம் ,தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி முருகேசன்,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் மற்றும் சார்பு நீதிபதியுமான  சாமுவேல் பெஞ்சமின்  உட்பட பலர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo