Onetamil News Logo

சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா ; நீர் பாதுகாப்பு சார்பான விழிப்புணர்வு பேரணி  

Onetamil News
 

சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா ; நீர் பாதுகாப்பு சார்பான விழிப்புணர்வு பேரணி  


 தூத்துக்குடி 2019 ஜூலை 15 ;தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழாவும், நீர் பாதுகாப்பு சார்பான விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.
சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் நிறுவனர் சு.சண்முகம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தி, காமராஜரைப் போல் நாட்டுப்பற்றுடனும், மனிதநேயத்துடனும், சிறந்த தலைவனாகவும் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பேசினார். அதன்பின் பள்ளியின் தாளாளரும், முதல்வருமான யு.ஜெயாசண்முகம் நீர் பாதுகாப்பின் அவசியத்தையும், அதனை பெருகச் செய்யும் வழிமுறைகளையும் பெற்றோரிடமும், உற்றார் உறவினரிடமும் கூறி நீரைச் சேமிக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் நீர் பாதுகாப்பு சார்பான விழிப்புணர்வு பேரணியை, தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்க செயலாளர் எட்வர்ட் ஜாண்சன்பால் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் “மரம் வளர்ப்போம் நாடுவளம் காப்போம்”, “நீரைச் சேமிப்போம் மனிதநேயம் காப்போம்”, “மழைநீரைச் சேமிப்போம் நீர்வளம் காப்போம்” என்ற வாசக பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு காமராஜ்நகர், மூன்றாவது மைல், ஆசிரியர்காலனி வழியாக பள்ளியை வந்தடைந்தனர்.
பேரணி முடிந்தவுடன் எபினேசர் சந்திரஹாசன் தலைமையில் மாவட்டச் சாரண, சாரணிய செயலாளர் ஊ.எட்வர்ட் ஜாண்சன்பால் , சக்தி வித்யாலயா பள்ளியின் நிறுவனரும் மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் மாவட்ட ஆணையருமான சு.சண்முகம் ,ஆகியோர்  மரம் நடுதல் செய்தனர். இதில் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அதன்பின் அனைவருக்கும் பள்ளியின் துணை முதல்வர் ரூபி ரத்ன பாக்கியம் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo