Onetamil News Logo

சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர்புடையவர்கள் ;விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Onetamil News
 

சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர்புடையவர்கள் ;விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


தூத்துக்குடி 2020 மே.20: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,  சார்பில் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர்புடையவர்கள் ;விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ; விளையாட்டுத் துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. அவ்வாறே, இவ்வாண்டிற்கான கீழ்க்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது 2020
2. அர்ஜூனா விருது 2020
3. துரோணாச்சார்யா விருது 2020
4. தயான்சந்த் விருது 2020
5. ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருது 2020
மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gov.in  மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உரை மேல் சம்பந்தப்பட்ட விருதினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கான விண்ணப்பங்களை பரிந்துரை செய்து அனுப்ப வேண்டியுள்ளதால்,  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில்  சமர்ப்பிக்க கடைசி நாள். 26.05.2020-க்குள் வந்து  சேரும்படி  அனுப்பி  வைக்க  வேண்டும்  என  தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்  தெரிவித்துள்ளார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo