Onetamil News Logo

நீர்பாசனக்கடன் திட்டத்தில் பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல்

Onetamil News
 

நீர்பாசனக்கடன் திட்டத்தில் பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல்


தூத்துக்குடி 2019 அக்டோபர் 8 ; தூத்துக்குடி மாவட்டத்தை விவசாயிகள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் நீர்பாசனக்கடன் திட்டத்தில் பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் .தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ;தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த சிறுகுறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ. 1.00 இலட்சம் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50%  அரசு மான்யம் அதிகபட்சம் ரூ. 50,000/- வரை வழங்கப்படுகிறது.சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் இருப்பிட சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் சிறுகுறு விவசாயி என்பதற்கான சான்றினை தாசில்தாரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த தகுதியுடைய விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo