Onetamil News Logo

முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

Onetamil News
 

முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.   


  தூத்துக்குடி 2019 ஜூன் 13 ;கோயமுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். கோயமுத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சக்திவேல் தகவல் தெரிவித்துள்ளார்.
கோயமுத்தூர்; மாவட்ட சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 11 நகல் பரிசோதகர்/நகல் படிப்பவர், 16 முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், 21 அலுவலக உதவியாளர், 16 காவலர் /  இரவுக் காவலர் / மசால்சி மற்றும் மற்றும் இரவுக் காவலர், 4 துப்புறவுப் பணியாளர், 5 பெருக்குபவர் மற்றும் 10 மசால்சி பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் கோயமுத்தூர் முதன்மை நீதிமன்ற வலைத்தளமாக district.ecourts.gov.in/Coimbatore  இல் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் பெற இறுதி நாள்: 28.06.2019. எனவே, தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கோயமுத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo