Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 100% ஊரடங்கு  உத்தரவு வெற்றி ;கலெக்டர் சந்திப் நந்தூரி பாராட்டு 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 100% ஊரடங்கு  உத்தரவு வெற்றி ;கலெக்டர் சந்திப் நந்தூரி பாராட்டு 


தூத்துக்குடி 22 மார்ச் 2020   ;தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரானோ சிறப்பு வார்டு அருகில் மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், ஊடகத் துறையினரின் பணிகளை பாராட்டி வாழ்த்தி நடைபெறும் கைதட்டல் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கொரானா வைரஸ்  சிகிச்சை அளிக்கும் மையம் முன்பு வைத்து மருத்துவ ஊழியர்கள் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் கைகளை தட்டி பொதுமக்கள் ஊடகத் துறையினருக்கு  பொதுமக்கள் மற்றும் ஊடகத் துறையினர் மருத்துவ துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மாவட்டம் முழுவதும் 100% ஊரடங்கு  உத்தரவை பொதுமக்கள் சிறப்பான ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்தனர் மாவட்டம் நாளை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனவும் நாளை முதல் பெரிய பெரிய மால்கள் பூட்டிய  படி இருக்கும் எனவும் சிறிய கடைகள் அனைத்தும் திறந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் எனவும் இருப்பினும் பொதுமக்கள் இந்த வைரஸ் தடுப்பு   நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் தூத்துக்குடியில் 2 பேர் இந்த  வைரஸ் பாதிப்பு இருக்குமோ என அச்சத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான வைரஸ் தொற்றும் இல்லை என கண்டறிந்து அனுப்பப்பட்டு விட்டனர் எனவே தூத்துக்குடியில் வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo