Onetamil News Logo

வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா ;144 தடை உத்தரவை நீக்க டாக்டர் .க .கிருஷ்ணசாமி  கோரிக்கை

Onetamil News
 

வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா ;144 தடை உத்தரவை நீக்க டாக்டர் .க .கிருஷ்ணசாமி  கோரிக்கை


தூத்துக்குடி 2018 ஏப்ரல் 15 ;தூத்துக்குடி மாவட்டத்தில் போடப்பட்டிருக்கிற 144 தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் : டாக்டர் .க .கிருஷ்ணசாமி தூத்துக்குடி எஸ்.பி மற்றும் கலெக்டர் க்கு  கோரிக்கை  மனு வழங்கி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமலிலுள்ள 144 தடையுத்தரவை விலக்கக்கோரி புதிய தமிழகம்  கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் .க .கிருஷ்ணசாமி வழங்கிய மனுவில் கூறியதாவது,
ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திரபோராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா ஏப்ரல் மதம் 16 ம் தேதி ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள கவர்னகிரியில் புதிய தமிழகம் கட்சி மற்றும் பொதுமக்களால் அனுசரிக்கப்பட்டது வருகிறது. இந்த ஆண்டு  திடீரென்டு ஏப்ரல் 15,16 ஆகிய தேதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.இது எந்த விதத்திலும் ஏற்புடையது ஆல்.கடந்த 20 ஆண்டுகளாக கவர்னகிரியில் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா புதிய தமிழகம் கட்சியால் எந்த வித அசம்பாவிதமும்  இன்றி அனுசரிக்கப்பட்டு வருகிறது. புதிய தமிழகம் கட்சியால் அனுசரிக்கப்பட்ட விழாவில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி கலந்து கொண்டார்.மேலும் புதிய தமிழகம் கட்சியினரும்,சுற்று வட்டார பொதுமக்களும் முளைப்பாரி உள்ளிட்ட கலை ,கலாச்சார நிகழ்வுகளுடன் இவ் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தீடீரெண்டு இந்த ஆண்டு 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது ,ஒரு சுதந்திர போராட்ட தியாகியை அவமதிப்பதாகும்.எனவே 144 தடையுத்தரவை நீக்கி,புதிய தமிழகம் கட்சியினரும்,சுற்று வற்ற பொது மக்களும் வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட,கவர்னகிரிக்கு வந்து செல்ல அனுமதி அளிக்குமாறு தூத்துக்குடி எஸ்.பி க்கு  வழங்கிய கோரிக்கையில் கூறியுள்ளார்.           
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo