Onetamil News Logo

மனநிலை பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 31 ஆண்டு சிறை ;தூத்துக்குடி மகிளா கோர்ட்  பரபரப்பு தீர்ப்பு

Onetamil News
 

மனநிலை பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 31 ஆண்டு சிறை ;தூத்துக்குடி மகிளா கோர்ட்  பரபரப்பு தீர்ப்பு


தூத்துக்குடி 2019 நவம்பர் 6 ;மனநிலை பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 31 ஆண்டு சிறை ;தூத்துக்குடி மகிளா கோர்ட்  பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் முதலிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (60). கூலிதாெழிலாளி. கடந்த ஜனவரி 25ம் தேதி அன்று சுமார் 14 வயது மதிக்கதக்க தனது உறவுக்கார சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி மனநிலை பாதித்தவர் என கூறப்படுகிறது. இது குறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிந்து பாண்டியை, போலீசார் கைது செய்தனர்.இது தாெடர்பான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட பாண்டிக்கு ஆயுள் தண்டணையும், சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டு தண்டணை, கொலைமிரட்டலுக்கு 7 ஆண்டு என மொத்தம் 31 ஆண்டு சிறை தண்டணையும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக சுபாஷினி வாதாடினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo