Onetamil News Logo

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் பங்கேற்று வழங்கினார்.

Onetamil News
 

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் பங்கேற்று வழங்கினார்.


தூத்துக்குடி 2019 ஜூலை 20 ;தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது..
இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் , மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞான கௌரி,ஆகிய இருவரும் 540 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார்கள். கால்டுவெல் பள்ளியில் தலைமை ஆசிரியர்  ஜேக்கப் மனோகர்  தலைமை தாங்கினார்..புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் அருட் சகோதரர் ஜோசப் தலைமை தாங்கினார்..
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரர் மரிய ஜோசப் அந்தோணி வரவேற்புரை வழங்கினார்..
இந்த விழாவில் மேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர் சந்தனம் ,முன்னாள் இயக்குநர்கே.பி.முருகானந்தம் ,அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல இணை செயலாளர் பி.சங்கர் ,முன்னாள் நகர கிளை பொருளாளர்  எஸ்.அந்தோணி ,மாணவரணி சாம் கௌதம்,ஸ்ரீ வை முத்துக்குமார் ,மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo