Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 5ம் தேதி உள்ளுர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 5ம் தேதி உள்ளுர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு 


தூத்துக்குடி 2019 ஜூலை 17;தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரம் தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய விருந்து கொண்டாட்டம் ஆகஸ்ட் 5-ம்நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 05ம் தேதி  அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.... தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரம் தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய விருந்து கொண்டாட்டம் ஆகஸ்ட் 5-ம்நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2019 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.  
எனினும் 05.08.2019 அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர்கள், ஆசிரியர்கள்  மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது.  இது செலாவணிச் முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act)   பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 10.08.2019 அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo