தூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்
தூத்துக்குடி 2020 ஜனவரி 21 ;தூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம் இன்று நடந்தது.தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே, எம்ஜிஆர் 103வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் தூத்துக்டுடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான சணமுகநாதன் எம்எல்ஏ., தலைமை தாங்கினார். கழக துணை ஒருங்கினைப்பாளர் கே.பி.முனியசாமி பங்கேற்று சிறப்பித்தார்.
கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசியதாவது:-தி.மு.க.வை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவிடம் தேர்தல் நிதி அளிக்க சென்ற எம்.ஜி.ஆரிடம் நிதி எதுவும் வேண்டாம். தமிழகம் முழுவதும் சென்று உங்கள் திருமுகத்தை காட்டினாலே போதும். அதுவே இயக்கத்துக்கு பல லட்சம் ஓட்டுக்களை பெற்றுத்தரும் எனக்கூறிய அண்ணா இறுதி மூச்சு வரை எம்.ஜி.ஆரை தனது இதயக்கனியாக வைத்திருந்தார் என்பது வரலாறு. அந்த அளவுக்கு தனது திரைப்படங்கள், பாடல்கள் மூலமாக அண்ணாவின் கொள்கைகளை தாங்கி நின்று தி.மு.க.வை தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு. அண்ணா மறைவுக்கு பின் முதல்-அமைச்சராக வந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரின் செல்வாக்கை கண்டு, அவரை கட்சியை விட்டே நீக்கினார். இதனால் மனம் உடைந்த எம்.ஜி.ஆர். ரசிகர்களால், தொண்டர்களால், கருப்பு சிவப்பு கொடியில் வெள்ளை தாமரையுடன் கூடிய கொடியை ஏற்றி அ.தி.மு.க. உருவாக்கப்பட்டது.
அதன்பின்னர், தான் நேசித்த அண்ணாவின் உருவப்படத்தையே கட்சியின் கொடியில் வைத்து அ.தி.மு.க.வை மாபெரும் வெற்றி பெற வைத்தார் எம்.ஜி.ஆர். அவரது மறைவுக்கு பின் பிளவுற்ற கட்சியை கடும் சோதனைகளுக்கு நடுவே மீட்டெடுத்த பெருமை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உண்டு. அதே போன்று கட்சியை ஒன்றரை கோடி தொண்டர்களின் எக்கு கோட்டையாக மாற்றி காட்டிய ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் ஒரு குடும்பத்தின் பதவி மோகத்தால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டது. இரட்டைஇலை சின்னமும் முடக்கப்பட்டது. வரலாற்றில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இல்லாத வகையில் 2-வது முறையாக தொண்டர்களால் கட்சி சின்னம் மீட்கப்பட்டது. கட்சியின் நலன் கருதி இரு அணியாக இருந்த நாங்கள் இணைந்தோம். பிளவுக்கு காரணமானவர்களை எளிதாக அகற்றினோம்.
பத்து நாட்களில் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என முதல்-அமைச்சர் மோகத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடித்து தூள்கிளப்பி வருகிறார். தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று மாபெரும் மக்கள் இயக்கமாக அ.தி.மு.க. மீண்டும் உருவெடுத்து உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இடைவேளை என்றும், இனிமேல்தான் கிளைமேக்ஸ் என்றும் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். இடைவேளையில் ரெஸ்ட் எடுத்தாலும் நாங்கள் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்த வேலைகளை செய்தே வருகிறோம். உள்ளாட்சி தேர்தல் எங்களுக்கு இடைவேளை என்றால் உங்களுக்கு முடிவு வேளை என்பதுதான் உண்மை.
தமிழகத்தின் மிகப்பெரிய ராஜதந்திரி என்று பெயர் எடுத்த கருணாநிதியாலேயே அ.தி.மு.க.வை வீழ்த்த முடியவில்லை. அவரது மகன் என்ற ஒற்றை காரணத்தினால் அண்ணா கண்ட இயக்கத்துக்கு தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க.வை வீழ்த்த எந்தவொரு தகுதியும் திறமையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலருமான செல்லபாண்டியன்,முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆறுமுகநயினார், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர் , விளாத்திகுளம் சட்டமன்றத் உறுப்பினர் சின்னப்பன் ,முன்னாள் எம்எல்ஏ மோகன் கிழக்குபகுதி செயலர் சேவியர், மேற்கு பகுதி செயலர் முருகன், தெற்கு பகுதி செயலர் ராமகிருஷ்னன், வடக்கு பகுதி செயலர் பொன்ராஜ் ஏசாதுரை தனராஜ் செரினா பாக்யராஜ் மார்க்கெட் பிரபாகரன் அதிமுக கட்சியினர் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.