Onetamil News Logo

தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வையாளர்கள் ஆய்வு

Onetamil News
 

தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொது பார்வையாளர்கள் ஆய்வு     


 தூத்துக்குடி 2019 மே 22 ;தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,,  தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பொது பார்வையாளர் சீமா சர்மா ஜெயன்., விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் கே.மாதவி லதா ., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சுரேஷ்குமார்,.,ஆகியோர் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை நாளை (23.05.2019) வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் காலை  வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு  தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வாக்குகள் எண்ணும் அறைகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பொது பார்வையாளர்;சீமா சர்மா ஜெயன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் கே.மாதவி லதா , ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சுரேஷ்குமார், ஆகியோர் இன்று (22.05.2019) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.  மேலும் வாக்கு எண்ணிக்கை அறையில் ஒவ்வொரு மேஜைகளிலும் நுண் பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உள்ள வரிசை எண் குறிப்பிட்டுள்ளதா என்பதையும் பார்வையிட்டார்கள். மேலும் தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட அஞ்சலக வாக்குச்சீட்டு எண்ணிக்கைக்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் உமா சங்கர், ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசந்திரன், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo