Onetamil News Logo

தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும்.  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை சந்தித்து இளஞ்சிறுத்தைகள் வேண்டுகோள்

Onetamil News
 

தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும்.  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை சந்தித்து இளஞ்சிறுத்தைகள் வேண்டுகோள் 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 6; தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும்.  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை சந்தித்து இளஞ்சிறுத்தைகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் கோவில்பட்டி தொகுதி அமைப்பாளர்  மாரிமுத்து ,அக்கா மகன் ஜான்சன் இன்று காலை விபத்தொன்றில் சிக்கி  படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்த்ததுடன் அவரது தாய், தந்தையருக்கு ஆறுதல் கூறினார்கள்.  மேலும்  மருத்துவமனை முதல்வர் (Deen) ரேவதி அவர்களை நேரில் சந்தித்து காயத்தின் தன்மை குறித்து கேட்டறிந்ததோடு,ஜான்சனுக்கு நன்கு சிகிச்சையளித்து காப்பாற்ற கேட்டுக்கொண்டுள்ளனர்.குறிப்பாக தூத்துக்குடி மருத்துவமனையில் மக்கள் நலன் கருதி மருத்துவர், செவிலியர், தூய்மைப்பணியாளர் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களையும் விரைந்து முழுமையாக நிரப்பிட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் தெரிவித்தார்.
இப்பணியில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாநில துணைச்செயலாளர் தோழர் விமல் வங்காளியார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் இராவணன், கோவில்பட்டி தொகுதி அமைப்பாளர் மாரிமுத்து ,தூத்துக்குடி தெற்கு ,மாவட்ட அமைப்பாளர் - இசிஎபா,சு.விடுதலைச்செழியன் ஆகியோர் பங்குபெற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo